தமிழகத்தில் நெல் உற்பத்தி கடும் சரிவு
சென்னை, ஏப்.10: தமிழகத்தில் நெல் உற்பத்தியில், கடந்த பத்தாண்டுகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பிரதான உணவுப் ப


சென்னை, ஏப்.10: தமிழகத்தில் நெல் உற்பத்தியில், கடந்த பத்தாண்டுகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிரதான உணவுப் பயிர் நெல். மாநில மக்களின் பிரதான உணவாக அரிசி வகை உணவுகள்தான் உள்ளன. எனவே தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பு அரிசி உற்பத்தியை சார்ந்தே உள்ளது.
ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் நெல் உற்பத்தி வேகமாகக் குறைந்து வந்திருக்கிறது. தமிழகத்தின் வருடாந்திர நெல் உற்பத்தி குறித்து மாநில அரசின் பொருளாதார புள்ளியியல் துறை அளிக்கும் புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.
2000-2001-ம் ஆண்டில் மாநிலத்தில் 20 லட்சத்து 80 ஆயிரத்து 10 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இது 2008-2009-ல் 19 லட்சத்து 31 ஆயிரத்து 603 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது.
சாகுபடி பரப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியைவிட, உற்பத்தி அளவில்தான் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2000}2001}ல் மாநிலத்தில் 73 லட்சத்து 66 ஆயிரத்து 320 டன் நெல் உற்பத்தி ஆனது. ஆனால், அதுவே 2008}2009}ல் 51 லட்சத்து 83 ஆயிரத்து 385 டன்னாகக் குறைந்து விட்டது.
நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காதது, நீர் பற்றாக்குறை, பசுமைப் புரட்சியின் மூலம் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் கிடைக்காதது, நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் விவசாய விளைநிலங்களின் பரப்பு குறைந்தது போன்றவை நெல் உற்பத்தியில் கடும் சரிவை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து, பொருளாதார ஆய்வாளரும், சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய உணவுப் பாதுகாப்புத் துறை இயக்குநருமான வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியதாவது:
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை உறுதி செய்ய வேண்டும். வேளாண் ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும். நதி நீர் பிரச்னைகளில் ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொண்டு, நிரந்தர தீர்வு காண வேண்டும். பெரும் எண்ணிக்கையில் சிறு, குறு நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நீர் நிலைகள் பாதுகாப்பு மற்றும் நீர்ப் பாசனத் திட்டங்களில் உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பையும், அதிகாரங்களையும் கூடுதலாக்க வேண்டும்.
எனினும், நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள கடும் சரிவு குறித்து இப்போது கூட நம் வேளாண்மைத் துறை கவலைப்படவில்லை. இந்நிலை தொடர்ந்தால், தமிழக மக்களின் உணவுப் பாதுகாப்பு அடியோடு சீர்குலைந்து போகும் என எச்சரிக்கிறார் ஆத்ரேயா.
சாகுபடி பரப்பு: ஆண்டு -சாகுபடி பரப்பு
(ஹெக்டேரில்)
2000-2001 : 20,80,010
2001-2002 : 20,59,878
2002-2003 : 15,16,537
2003-2004 : 13,96,651
2004-2005 : 18,72,822
2005-2006 : 20,50,455
2006-2007 : 19,31,397
2007-2008 : 17,89,170
2008-2009 : 19,31,603
உற்பத்தி: ஆண்டு } உற்பத்தி
(டன்னில்)
2000-2001 : 73,66,320
2001-2002 : 65,83,630
2002-2003 : 35,77,108
2003-2004 : 32,22,776
2004-2005 : 50,61,622
2005-2006 : 52,09,433
2006-2007 : 66,10,607
2007-2008 : 50,39,954
2008-2009 : 51,83,385
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...