மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மேல்மலையனூர் கோயிலில் வசூலா? பக்தர்கள் வேதனை

செஞ்சி,  ஆக.  9:  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் கோயில் பூசாரிகள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். ÷தமிழகத்தில்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:13 am

ஜெ.பாபு

செஞ்சி,  ஆக.  9:  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் பக்தர்களிடம் கோயில் பூசாரிகள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.

÷தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருபவள் மேல்மலையனூர் அங்காளம்மன். இக் கோயிலுக்கு திருவிழா நாள்கள் மட்டுமன்றி நாள்தோறும் பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

÷அருகில் உள்ள செஞ்சிக்கோட்டை, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆகியவற்றுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் மேல்மலையனூருக்கு வருகின்றனர்.

÷இந்நிலையில் ஆலய நுழைவாயில்களிலும், அர்ச்சனை செய்ய வரும் பக்தர்களிடமும் கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள் சிலர் அங்குள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

÷அண்மையில் வெள்ளக்கோவிலில் இருந்து மேல்மலையனூருக்கு வந்த 40 பேர் கொண்ட பக்தர்கள் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறினராம். ஆனால் ஒருவர் பெயருக்கு மட்டும்தான் அர்ச்சனை செய்ய முடியும் என்று கோயில் தரப்பில் கூறப்பட்டதாம். இதனால் இருதரப்பினருக்கும் கருவறையில் சண்டை மூண்டதாக வெள்ளக்கோவிலில் இருந்து வந்த பக்தர்கள் தெரிவித்தனர். ÷கோயிலில் உள்ள பூசாரிகள் மற்றும் அவரது ஆள்கள் பண வசதி படைத்த பக்தர்களை கண்டறிந்து, அவர்களிடம் மூலஸ்தானத்துக்கு நேராக அழைத்துச் செல்கிறோம் என்று கூறி |. 500 வரை வசூல் செய்வதாகக் கூறப்படுகிறது. ஆனால் கோயிலில் நுழைவுச் சீட்டு கட்டணம் |. 3 மட்டுமே.

÷ஆலயத்தில் உள்ள பாம்பு புற்றை வணங்கி செல்லும் பக்தர்களிடம் கட்டாயப்படுத்தி பணம் கேட்கின்றனர். புற்று மண்ணையும் விலை பேசி விற்கின்றனர் என்று புகார் கூறப்படுகிறது.

÷புற்று மண்ணை விற்பது குறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டபோது, "ஆரம்பகாலத்தில் அதுபோன்ற செயல்கள் நடைபெற்று இருக்கலாம். ஆனால் தற்போது அந்தத் தவறுகள் இங்கு நடைபெறவில்லை' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.