அப்போது திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்ற பெண் காவல் நிலையத்தில் இருந்தார். மணிகண்டன் தங்களது மகன் என்றும், தன்னிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸôரிடம் தெரிவித்தார். மேலும் அவன் மணிகண்டனே அல்ல, அவன் பெயர் குமாரவேல், கற்பகத்தின் ஒன்பதாவது மகன் என்று வாதிட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் கற்பகத்தின் வயது தற்போது 75. நாங்கள் மணிகண்டனின் பிறப்புச் சான்றிதழ், சிறப்பு பள்ளியில் படித்ததற்கான சான்று, குடும்ப அட்டையில் மணிகண்டனின் பெயர், மாற்றுத் திறனாளிகள் துறையின் பதிவு அட்டை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை போலீஸôரிடம் கொடுத்தோம். மேலும் மனநலம் குன்றிய நிலையில் உள்ள மணிகண்டனால் யார் தனது பெற்றோர் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலவில்லை.