சீரமைக்கப்படுமா சிறுகடம்பூர் ஏரி
செஞ்சி, டிச. 10: செஞ்சி சிறுகடம்பூர் ஏரியின் மதகுகள் சரியாக பராமரிக்கப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது. சிறுகடம்பூர் ஏரி 1468 மீட்டர் நீளம் உள்ளது. இந்த ஏரி 1916-ஆம் ஆ


செஞ்சி, டிச. 10: செஞ்சி சிறுகடம்பூர் ஏரியின் மதகுகள் சரியாக பராமரிக்கப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறுகிறது. சிறுகடம்பூர் ஏரி 1468 மீட்டர் நீளம் உள்ளது. இந்த ஏரி 1916-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக கல்வெட்டு உள்ளது. இதன் மூலம் 103.8 ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. மிகப் பெரிய அளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரிக்கு மேல்மலையனூர் ஏரி, கூடப்பட்டு அணை மற்றும் மலைகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தால் இப்பகுதி விவசாயிகள் 3 போகம் விவசாயம் செய்ய முடியும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை சார்பில் நீர் வள ஆதார அமைப்பு, மத்திய நீர்வள ஆணையத் திட்டத்தின் கீழ் |21.81 லட்சம் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற்றது.
இப்பணி நடைபெற்ற பின்னர்தான் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதாக இங்குள்ள விவசாயிகள் புகார் தெரிவித்தனர். பாசன வசதி பெறும் நிலங்கள் வரை ஏரிக் கால்வாய் கட்டப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு கால்வாய் முழுமையாக கட்டப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.மாதவன் கூறுகையில், "இத்திட்டத்தின் மூலம் ஏரிக்கரை வேலை திட்டமிட்டப்படி நடைபெறவில்லை. நீர்வரத்து வாய்க்கால்கள் சீரமைப்பு வேலைகள் முழுமை பெறவில்லை' என்று கூறினார். இந்நிலையில் ஏரிக்கு வரும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ஏரியின் கொள்ளளவை நீர் எட்டவில்லை. இதனால் கோடி போகவில்லை. மேலும் ஏரி உபரிநீர் வெளியேறும் கால்வாயில் முள்புதர்கள் மண்டி கிடக்கிறது. இந்த இடத்தில் செஞ்சி பேரூராட்சி குப்பைகளை மலைபோல் குவித்து வைத்துள்ளனர். குப்பைகளால் ஏரி உபரிநீர் கால்வாய் தூர்ந்து போய் உள்ளது. ஏரி நீர் நிரம்பி இவ்வழியாக உபரி நீர் வெளியேறும் போது திசை மாறி விவசாய நிலத்தில் பாயும் நிலை உள்ளது. மேலும் குப்பைக் கழிவுகளில் இருந்து வெளியேறும் நச்சு மற்றும் ரசாயன மாற்றங்களால் நிலத்தடி நீரும் ஏரியின் உபரி நீரும் விஷத்தன்மையாக மாறி பல்வேறு வகையான நோய்களைப் பரப்பும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. ஏரி மதகுகளை பராமரிக்கக்கோரியும், கால்வாய்களை சீரமைக் கோரியும் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மதகுகளை சீரமைத்து நீர் வெளியேறுவதைத் தடுத்து 3 போகம் விளைச்சலுக்கு வழி வகுக்குமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...