ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அதிக லாபம் தரும் யாழ்ப்பாணம் தென்னை சாகுபடி

சிதம்பரம், பிப். 24: கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வெகுவாக குறைந்து வருகிறது. குறிப்பாக மாறி வரும் வானிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்கள், தொழிலாளர் பற்றாக்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:30 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், பிப். 24: கடந்த சில ஆண்டுகளாக தென்னை மரங்கள் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வெகுவாக குறைந்து வருகிறது.

குறிப்பாக மாறி வரும் வானிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சீற்றங்கள், தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னை தென்னை சாகுபடி பரப்பளவை குறைத்து வருகிறது.

மறுபுறம் தென்னையை தாக்கும் சிலந்தி தாக்குதல்களும் தென்னை சாகுபடியை ஒரு லாபம் இல்லாத பயிராக மாற்றி வருகிறது.

இத்தகைய சூழலில் புதிய குட்டை ரக தென்னை ரகங்களுக்கு மாற்றாக சாகுபடி செய்யப்படும் பாரம்பரிய யாழ்ப்பாணம் தென்னை ரகங்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி, உற்பத்தித் திறன் மற்றும் லாபம் தருவதாக உள்ளது.

எனவே யாழ்ப்பாணம் பாரம்பரிய தென்னை சாகுபடி பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

வரலாறு:

தமிழகத்தின் தென் கடலோரப் பகுதி மாவட்டங்களாக குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் அதிகளவு சாகுபடி செய்யப்படும் யாழ்ப்பாணம் தென்னை ரகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இலங்கையில் பெரும் மழை, இயற்கைச் சீற்றங்களின் போது கடலோரப் பகுதிகளில் நன்றாக வளர்ந்துள்ள யாழ்ப்பாணம் தென்னை மரங்களில் உள்ள முற்றிய தேங்காய்கள் இயற்கையாக கடலில் விழுந்து அலைகளில் அடித்து வரப்பட்டு குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் ஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

யாழ்ப்பாணம் தென்னை ரகத்தின் அழகில் மயங்கிய கடலோரப் பகுதி பெண்கள் தங்கள் வீடுகளில் தோட்டங்களில் அதை நடவு செய்து வளர்த்து வந்ததாக பாரம்பரிய விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வளர்க்கப்பட்ட தென்னைகள் பெரிய அளவில் காய்களை தந்ததாலும், இயற்கையாகவே நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுத்த காரணத்தினாலும் குமரி மாவட்ட விவசாயிகள் ஆர்வமுடன் இதை சாகுபடி செய்து வருகின்றனர்.

சாகுபடி குறிப்புகள்: யாழ்ப்பாணம் தென்னை ரகங்களை முதலில் தென்னை நாற்றங்கால் ((coconutnursery) அமைத்து சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நன்றாக விளைந்து, முற்றிய, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத தென்னை காய்கள் தேர்வு செய்யப்பட்டு நன்றாக இயற்கை உரங்கள் கொண்டு அமைக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கையில் வளர்க்கப்படுகிறது.

இவ்வாறு வளர்க்கப்படும் பாரம்பரிய யாழ்ப்பாணம் தென்னை ரகத்தின் மூன்று முதல் ஐந்து மாதங்களில் நேரடியாக தென்னை தோட்டங்களில் நடவு செய்ய தயாராகிவிடும்.

இத்தகைய காலக்கட்டத்தில் விவசாயிகள் தங்களின் தோட்டங்களில் 25 அடி முதல் 30 அடி இடைவெளியில் குழிகள் தோண்டி ஒரு மாத காலத்துக்கு காயச் செய்ய வேண்டும்.

குழியில் நன்கு மக்கிய தொழுஉரம், இயற்கை வேளாண் கழிவுகள் கொண்டு ஒரு அடி அளவுக்கு நிரப்ப வேண்டும்.

இரண்டு கைப்பிடி அளவுக்கு தூள் உப்பையும் குழியில் போட்டு நன்றாக இயற்கை உரங்களுடன் கலக்க வேண்டும். பின்னர் நன்றாக வளர்ந்த தென்னை நாற்றங்காலில் இருந்து சிறந்த நன்கு வளர்ந்த தென்னை மரங்களை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.

யாழ்ப்பாணம் தென்னை ரகங்கள் எட்டு முதல் ஒன்பது ஆண்டுகள் வரை உயரமாக வளர்ந்து காய்க்கும் தன்மை கொண்டது. இத்தகைய காலக்கட்டத்தில் குமரி மாவட்ட விவசாயிகள் யாழ்ப்பாண தென்னையுடன் ஊடு பயிராக (ஐய்ற்ங்ழ்ஸ்ரீழ்ர்ல்) செந்தொழுவான் ரக சிகப்பு வாழை மரங்களை வளர்க்கின்றனர்.

மேலும் பாக்கு மரங்களும் ஊடுபயிராக விவசாயிகளால் வளர்க்கப்படுகிறது. விவசாயிகள் முதல் ஆண்டில் மட்டுமே அதிகளவு வேளாண் முதலீடுகளை செய்ய வேண்டியிருக்கும், சில ஆண்டுகளில் தென்னை, பாக்கு மற்றும் வாழை போன்ற பணப்பயிர்களின் சாகுபடி வாயிலாக அதிகளவு பொருளாதார பலன்களை பெற முடியும்.

பிறபயன்கள்: யாழ்ப்பாணம் தென்னையுடன் ஊடுபயிராக பாக்கு, வாழை சாகுபடி செய்யப்படுவதால் பிற வேளாண் பொருள்கள் விற்பனையில் தொடர்ந்து நாள்தோறும் வருமானம் கிடைக்கும்.

யாழ்ப்பாணம் தேங்காய் பெரிய அளவில் தரத்தில் உள்ளதால் பெரிய வியாபார நிறுவனங்கள் நேரடியாகவே விவசாயிகளின் தோட்டத்தில் ரூ.13 முதல் 18 வரை விலைக்கு வாங்கிக் கொள்கின்றன.

யாழ்ப்பாணம் தென்னை தோட்டங்களில் நடவு மற்றும் ஊடுபயிர் சாகுபடி ஆரம்பப் பணிகளை மேற்கொண்ட பின்னர் விவசாயிகள் அதன் குத்தகைக்கு விடும் நடைமுறை உள்ளது.

இதன் வாயிலாக விவசாயிகளுக்கு வருடந்தோறும் குத்தகைதாரர்கள் வாழை சாகுபடிக்கு பணம் தருகின்றனர். எனவே தென்னை சாகுபடி செய்ய விரும்பும் தமிழக விவசாயிகள் அதிக உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன், லாபம் தரும் பாரம்பரிய மிக்க யாழ்ப்பாண தென்னை சாகுபடி செய்து அதன் வாயிலாக அதிக மகசூல் பெற முடியும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.