ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தவிட்டிலிருந்து கேஸ்: சிதம்பரம் இளைஞர் ஆர்வம்

சிதம்பரம், பிப். 23: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பயின்று வரும் ஊனமுற்ற இளைஞரான கே.நாகராஜன் தவிட்டிலிருந்து கேஸ் தயாரித்து சாதனை படைத்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 30-வது வட்டத்தைச் சே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:29 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், பிப். 23: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பயின்று வரும் ஊனமுற்ற இளைஞரான கே.நாகராஜன் தவிட்டிலிருந்து கேஸ் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 30-வது வட்டத்தைச் சேர்ந்த விவசாயி கோதண்டபாணி மகன் நாகராஜன் (21). கால் ஊனமுற்றவரான இவர் சிதம்பரம் விபீஷணபுரம் விநாயகர்நகரில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்கி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் ஒருங்கிணைந்த பட்டப் படிப்பான எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி செல்லும் நேரம் போக மீதமுள்ள நேரத்தை வீணாக்காமல் வீட்டிலிருந்தபடியே இவர் நெல்லிலிருந்து வெளியேறும் தவிட்டிலிருந்து கேஸ் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்துள்ளார்.

தகர டப்பா ஒன்றில் தவிட்டை வைத்து பம்பு ஸ்டவ் மூலம் அதனை சூடுபடுத்துகிறார். அந்த தகர டப்பாவிலிருந்து அலுமினிய குழாயுடன் பிளாஸ்டிக் டப்பாவை இணைந்துள்ளார். தவிடு சூடாகி அதிலிருந்து வெளியேறும் வாயு குழாய் வழியாக டப்பாவில் வந்து சேருகிறது. அந்த வாயுவை தீப்பற்ற வைத்து காண்பிக்கிறார் நாகராஜன்.

கடந்த 3 ஆண்டுகளாக தவிட்டிலிருந்து கேஸ் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு தற்போது வெற்றி கண்டுள்ளேன். தற்போது எவ்வளவு கிலோ தவிடு போட்டால் எத்தனை கிலோ கேஸ் கிடைக்கும் என்று கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன். கேஸ் தயாரிக்கும் செலவு குறைவாக இருந்தால் நான் கண்டுபிடித்த தவிடு கேஸ் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நாகராஜன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.