ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விவசாயிகள் இயற்கை சான்று பெறுவது எப்படி?

சிதம்பரம்,ஜன.13: தமிழக விவசாயிகள் இயற்கை சான்று பெறுவது குறித்த நடைமுறைகளை தெரிந்து கொள்வது அதிக லாபம் பெற உதவும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:47 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம்,ஜன.13: தமிழக விவசாயிகள் இயற்கை சான்று பெறுவது குறித்த நடைமுறைகளை தெரிந்து கொள்வது அதிக லாபம் பெற உதவும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

இச்சான்று பெறுவது குறித்து அவர் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தின் பல முன்னோடி மற்றும் பாரம்பரியமிக்க விவசாயிகள் சுற்றுச்சூழல் மாசுகளை தவிர்க்கவும்,அதிகளவு உற்பத்தி செய்ய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். இருப்பினும் சந்தையில் விற்பனை செய்யும் போது இயற்கை சான்று இல்லாத காரணத்தால் அதிக விலைக்கு தங்களின் விளை பொருள்களை விற்பனை செய்ய முடியவில்லை. இத்தகைய நிலையில் விவசாயிகள் இயற்கை சான்று பெறும் நடைமுறைகளை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

இயற்கை சான்று பெறும் நடைமுறை: நமது நாட்டில் கோவாவில் செயல்படும் ஒ.எஃப்.ஏ.ஐ என்ற அமைப்பு இயற்கை வேளாண்மை விளைந்த விவசாய விளைபொருள்கள் என்பதற்கான சான்று வழங்குவதை கண்காணிக்கும் அகில இந்திய அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வழிகாட்டுதலின்படி 2 வகையான சான்றுகள் வழங்கப்படுகின்றன.

1)- பி.ஜி.எஸ் (பார்ட்டிசிபேட்ரி காரண்டி சிஸ்டம்) எனப்படும் சான்று 4 அல்லது 5 முன்னோடி விவசாயிகள் குழுவாக இணைந்து இந்த சான்று வழங்கலாம். சான்று வழங்குவதற்கான அடிப்படை விதிகள் மற்றும் விளை பொருள்களின் தரம் அனைத்தையும் பரஸ்பரம் கண்காணித்து அவர்களாகவே வழங்கிக் கொள்ளக்கூடிய சான்று இது. எங்கு தவறு நடந்தாலும் எளிதாக கண்டறிந்து விட முடியும், அதாவது. ரசாயனத்தில் விளைந்தவற்றை இயற்கை என விற்பனை செய்ய முயன்றால் கண்டுபிடிப்பது சுலபம். எனவே சான்று வழங்கிக் கொள்ளும் விவசாயிகளில் ஒருவர் தவறு செய்தாலும் மொத்த விவசாயிகளும் சான்றும் பறிபோய்விடும்.

2)- டி.பி.எஸ் சான்று (தேர்ட் பார்ட்டி அப்ரைசல்): இயற்கை விவசாயத்தில் மிகவும் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் இந்த சான்று வழங்க முடியும். இந்த முன்னோடி விவசாயிகள் குறிப்பிட்ட பண்ணையை கண்காணித்து ஒ.எஃ.ஐ.ஏ. அமைப்புக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சிறிய மற்றும் பெரிய அளவிலான தனிநபர் பண்ணைகளுக்கு கூட இத்தகைய சான்றிதழ் பெற்று இயற்கை வேளாண் பொருள்கள் சாகுபடி மற்றும் விற்பனையில் விவசாயிகள் ஈடுபட முடியும்.

இயற்கை சான்றிதழ் வழங்கும் அமைப்பின் முகவரி: ஒ.எஃ.ஐ.ஏ., ஜி-8,புனித பிரிட்டோஸ் அபார்ட்மென்ட்ஸ், ஃபைரா அல்டா, மப்பூஸô-403507, கோவா, இந்தியா.

 தமிழக விவசாயிகள் தங்களுக்கு தேவையான இயற்கை சான்றிதழை பெற்று வேளாண் சந்தைகளில் வணிகக்கூடங்களில் தங்களது விவசாய பொருள்களை 20 முதல் 30 சதவீதம் வரை அதிக விலைக்கு எளிதாக விற்பனை செய்ய முடியும். மேலை நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்து அதிக லாபம் பெற முடியும் என விரிவுரையாளர் முனைவர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.