‌லாபம் கொழிக்கும் ரோஜா

பண்ருட்டி, ஜன. 27:  ரோஜா தோட்டத்தை முறையாக பராமரித்து வந்தால் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும் என வேகாக்கொல்லை கிராமத்தைச்  சேர்ந்த ரோஜா சாகுபடி விவசாயிகள் கூறினர். கடலூர் மாவட்டம் பண்ருட
‌லாபம் கொழிக்கும் ரோஜா
Updated on
1 min read

பண்ருட்டி, ஜன. 27:  ரோஜா தோட்டத்தை முறையாக பராமரித்து வந்தால் ஆண்டுக்கு ரூ. ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும் என வேகாக்கொல்லை கிராமத்தைச்  சேர்ந்த ரோஜா சாகுபடி விவசாயிகள் கூறினர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள வேகாக்கொல்லை, பிள்ளைப்பாளையம், சத்திரம், வெங்கடாம்பேட்டை, அன்னதானம்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, பெலாத்தோப்பு, ஏ.புதூர், பாச்சாரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ரோஜா, கனகாம்பரம், குண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மலர்களை பண்ருட்டி, கடலூர், விருத்தாசலம், திண்டிவனம், சிதம்பரம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வதாலும், நல்ல விலை போவதாலும் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.

இது குறித்து வேகாக்கொல்லையைச் சேர்ந்த பார்த்திபன் நர்சரி உரிமையாளரும், விவசாயியுமான ஆர்.ராமகிருஷ்ணன் கூறியது:

25 ஆண்டுகளுக்கு முன் தான் இப் பகுதியில் மலர் உற்பத்தி செய்ய தொடங்கினர்.

நல்ல விளைச்சலும், விலையும் கிடைத்ததால் இன்று சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி செய்யப்படுகிறது.

நடவுக்கு தேவையான ரோஜா கன்றுகளை நாங்களே உற்பத்தி செய்துக் கொள்கிறோம். அல்லது உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் ஒரு கன்று ரூ.2 என வாங்கி நடவு செய்வோம். ஒரு ஏக்கருக்கு சுமார் 1500 கன்றுகள் தேவைப்படும்.

கன்று நட்ட 3-ம் மாதம் முதல் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு பலன் தரும். ஆண்டுக்கு சராசரி செலவுகள் போக ரூ.90 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை லாபம் கிடைக்கும்.

உற்பத்தி செய்த மலர்களை மொத்தமாக வியாபாரிகளிடம் விற்பனை செய்வதால் அவர்கள் இட்டதுதான் விலை.

மேலும் விற்பனைக் கழிவு வேறு தர வேண்டும். எனவே விவசாயிகள் நேரிடையாக மலர்களை விற்பனை செய்தால் மேலும் அதிக லாபம் கிடைக்கும் என விவசாயி ஆர்.ராமகிருஷ்ணன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com