மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

மேம்படுத்தப்படாத மேல்மலையனூர் பஸ் நிலையம்

செஞ்சி: குடிநீர், நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பஸ் நிலையமாக செயல்படுகிறது மேல்மலையனூர் பஸ் நிலையம். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:19 pm

ஜெ.பாபு

செஞ்சி: குடிநீர், நிழற்கூரை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத பஸ் நிலையமாக செயல்படுகிறது மேல்மலையனூர் பஸ் நிலையம்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் வருகை தரும் ஆன்மிக சுற்றுலா தலமாக இக் கோயில் உள்ளது.

இக் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை இரவு நடைபெறும் அம்மன் ஊஞ்சல் தாலாட்டு விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபடுகின்றனர். இக் கோயிலை சுற்றியுள்ள மைதானம் இடுகாட்டு மைதானம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அமாவாசை தோறும் அம்மனை தரிசனம் செய்து இடுகாட்டு மைதானத்தில் தங்கினால் மன அமைதி ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் இக் கோயிலில் ஆண்டுதோறும் மாசிபெருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் தேரோட்டம், தீமிதி, மயானக் கொள்ளை ஆகியவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். இவ் விழாக்களில் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்விழாவின்போது தாற்காலிக பஸ் நிலையம், தாற்காலிக காவல் நிலையம், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என அனைத்தும் தாற்காலிகமாக ஏற்படுத்தப்படும். திருவிழா முடிந்தவுடன் அனைத்தும் காணாமல் போகும்.தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் இங்கு வந்து  நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆனால் இங்கு வருவோருக்கென அடிப்படை வசதிகள் ஏதும் பஸ் நிலையத்தில் இல்லை.

இங்குள்ள பஸ் நிலையம் பயணிகள் நிழற்கூரை இல்லாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும் பக்தர்களும் வெயிலில் வாடுகின்றனர். சிலர் வெயிலுக்கு அங்குள்ள கடைகளில் ஒதுங்குகின்றனர். மேலும் குடிநீர் வசதியும் இல்லை.

செஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, புதுச்சேரி, வேலூர் ஆகிய ஊர்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கழிப்பிட வசதி மட்டுமே பஸ் நிலையத்தில் உள்ளது. மேல்மலையனூர் கோயிலைச் சுற்றி குப்பை இல்லாமல் உள்ளது. ஆனால் ஊரில் தெருக்களில் குப்பை நிறைந்து காணப்படுகிறது.

தெருக்கள் மேடும் பள்ளமுமாக உள்ளன. மேல்மலையனூரில் உள்ள ஒன்றிய அலுவலகமோ, ஊராட்சி நிர்வாகமோ இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் ஆன்மிக சுற்றுலா தலமான மேல்மலையனூரை மேம்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இங்கு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவைப்பட்டால் நிலம் கையகப்படுத்தி அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் அல்லது வேறு பிரதான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.