மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

"பூச்சித் தாக்குதலில் அழியும் கத்தரி விவசாயம்'

செஞ்சி, ஜூன் 29: கத்தரிக்காயில் பூச்சி தாக்குவதால் விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டு செஞ்சி வட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செஞ்சி வட்டம் வணக்கம்பாடி, பொற்குணம், மகாதேவிமங்கலம், கடலி, நீலாம்பூண்டி உள்ள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:12 pm

ஜெ.பாபு

செஞ்சி, ஜூன் 29: கத்தரிக்காயில் பூச்சி தாக்குவதால் விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டு செஞ்சி வட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

செஞ்சி வட்டம் வணக்கம்பாடி, பொற்குணம், மகாதேவிமங்கலம், கடலி, நீலாம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் நாட்டு கத்தரி பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக வணக்கம்பாடி கிராமத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து கத்தரி பயிர் செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் கத்தரி விளைச்சல் நன்றாக இருந்தாலும், தற்போது பெய்த மழையால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் கத்தரிக்காயில் பூச்சி இறங்கி சொத்தையாகி விட்டது.

இங்கு இருந்து ஒரு நாளைக்கு சுமார் 75 மூட்டைகள் விற்பனைக்கு செல்கிறது. குறிப்பாக திண்டிவனத்துக்கு தினமும் 40 மூட்டைகள் விற்பனைக்கு செல்கிறது. வணக்கம்பாடியில் விலையும் நாட்டுக் கத்தரிக்கு திண்டிவனத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு கிலோ ரூ.5-க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். வியாபாரிகள் ரூ.10-க்கு விற்பனை செய்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் மிக அதிக அளவு கத்தரி விளைச்சல் செய்ததற்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விளைச்சலில் சாதனையை பாராட்டி வேளாண் துறை கத்தரி அவார்டு வழங்கி சிறப்பித்துள்ளது.

செஞ்சி உழவர் சந்தை மற்றும் காய்கறி அங்காடிகளில் 10 மூட்டை கத்தரிக்காய் விற்பனை செய்கின்றனர். ஆனால் திடீரென கத்தரிக்காயை பூச்சி தாக்கி விட்டதால் அவற்றை அறுவடை செய்து வீணாக வீதியில் கொட்டி அழித்து வருகின்றனர். இதனால் கத்தரி விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து வணக்கம்பாடி விவசாயி ஒருவர் கூறுகையில், ""ரூ.1000 அளவுக்கு பூச்சி மருந்து அடித்து விட்டேன். கத்தரியை பூச்சி தாக்குவது நிற்கவில்லை'' என்றார். மேலும் 4 மூட்டை விளைந்தால் அதில் 2 மூட்டை பூச்சி தாக்கி சொத்தையாக உள்ளது. இதனால் விளைச்சலில் பாதி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வேளாண் துறையினர் இது குறித்து கண்டுகொள்வதில்லை. கத்தரிக்கு தேவையான பூச்சி மருந்துகளை தருவதில்லை'' என்றார் அவர்.

இக்கிராமத்தில் மட்டும் 90 விவசாய குடும்பத்தினர் சுமார் 10 ஏக்கர் அளவில் கத்திரி வைத்து பயிர் செய்து வருகின்றனர். இது குறித்து வேளாண் துறை தக்க நடவடிக்கை எடுத்து பாதிப்படைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.