சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

புதிய தலைமுறைக்கு ஒரு பொக்கிஷம்!

பச்சிமிரியம் ஆதியப்பய்யா இயற்றிய பைரவி ராக, அடதாள வர்ணம்எப்படிப் பாடப்படுகிறது என்று கர்நாடக இசை ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அதன் வடிவம் முன் எப்படி இருந்தது? ""இதில் சுத்த தைவதம் இப்போது சதுஸ்ரத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:59 pm

சாருகேசி

பச்சிமிரியம் ஆதியப்பய்யா இயற்றிய பைரவி ராக, அடதாள வர்ணம்எப்படிப் பாடப்படுகிறது என்று கர்நாடக இசை ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால் அதன் வடிவம் முன் எப்படி இருந்தது? ""இதில் சுத்த தைவதம் இப்போது சதுஸ்ரத தைவதம் ஆகிவிட்டது!'' என்கிறார் சங்கீத கலாநிதி ஆர். வேதவல்லி.

""இதைப்போலவே பல கீர்த்தனைகள் அவை இயற்றப்பட்ட ராகங்களில் பாடப்படாமல், கடந்த ஒரு நூற்றாண்டில் பல மாற்றங்களைக் கண்டுவிட்டன. இவை எப்போது மாறின? யாரால் மாற்றப்பட்டன? தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை.

ஆனால் அவற்றின் உண்மையான வடிவங்கள் எப்படி இருந்தன, முன்பு எப்படி பாடப்பட்டு வந்தது? என்று புதிய தலைமுறை இசைக்கலைஞர்கள் தெரிந்து கொள்வது அவசியம்!'' என்கிறார் மூத்த இசைக்கலைஞர் வேதவல்லி.

இதற்காகவே 30 வருடங்களாகத் தாம் உழைத்துச் சேர்த்த தகவல்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விடாமல்,வருங்கால சமுதாயத்துக்குக்குறுந்தகடாக உருவாக்கித் தந்திருக்கிறார்.

"பிரமாணம்' என்ற இந்தக் குறுந்தகடு எத்தனை விலைமதிப்பற்ற பொக்கிஷம் என்பதைச் செவி சாய்த்துக் கேட்பவர்கள் நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

ஜ்""நமது சங்கீதம் வெறும் சுவரங்களில் இல்லை. கமகங்களிலும் மூர்ச்சனைகளிலும்தான் நம் இசையின் முழுமையைப் பெற முடியும். சில ராகங்களைப் பாடும்போது இயலாமை காரணமாக குரலுக்குத் தகுந்தமாதிரி பாடினார்கள். எனவே இந்த மாற்றங்களைக் சுட்டிக்காட்டினால்அன்றித் தெரியாது. பல வர்ணங்களில் முன்பு அனுபந்தம் என்று உண்டு. சரணம் முடிந்ததும் இது பல்லவியுடனோ அனுபல்லவியுடனோ இணைந்து விடும். ஒரே பாடலாக அது இருக்க வேண்டும். இப்போது? இரண்டு பாகங்களாகப் பிரிந்து விட்டது!'' என்கிறார் வேதவல்லி.

தியாகராஜரின் பல பாடல்களின் ராகங்கள் மாற்றப்பட்டும் பாடப்பட்டு வருகின்றனவாம். ஒரே ஒரு ராகத்தில் மட்டுமே ஒரு கீர்த்தனை இயற்றியிருக்கிறார். அதை மாற்றிப் பாடினால் அந்த ராகமே மறைந்து போய்விடாதா? அதேபோல் அவர் தேசாதியில் இயற்றிய பாடல்கள், இப்போது ஆதி தாளத்தில் பாடப்பட்டு வருகின்றன!

"பிரமாணம்' குறுந்தகடுகளைப் பெற்றுக் கொண்ட மிருதங்க வாத்திய இசைக் கலைஞர், சங்கீத கலாநிதி உமையாள்புரம் சிவராமன், இது வெறும் பிரமாணம் அல்ல. "காலப் பரிமாணம்' என்று சிலேடையாகப் பாராட்டியிருக்கிறார்.

இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஒரு வருத்தம். ""வேதவல்லி அவர்கள் இந்தப் பணியை இன்னும் 30 ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்க வேண்டும்!'' என்றார்.

இரு குறுந்தகடுகள் கொண்ட"பிரமாணம்' ஸ்வாதி வெளியீடு. ""இசைத் துறையில் லாப நஷ்டக்கணக்குப் பார்க்காமல், இதை ஒரு கடமையாகச் செய்து வரும் சுதாகர் பாராட்டுக்குரியவர். இளைய தலைமுறையினர் நிச்சயம் பயன் அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.