கணிதம், அறிவியலில் சரிந்துவரும் சதங்கள்
மதுரை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை வருவாய் மாவட்ட அளவில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிதம், அறிவியலில் சதம் எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து வருவதை தேர்வு முடிவுகள்


மதுரை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மதுரை வருவாய் மாவட்ட அளவில் கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிதம், அறிவியலில் சதம் எடுக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்து வருவதை தேர்வு முடிவுகள்
காட்டுகின்றன.
மதுரை வருவாய் மாவட்ட அளவில் இந்தாண்டு தேர்வு எழுதிய 34,779 மாணவ, மாணவியரில் 30,577 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில், தேர்வு எழுதிய 16,882 மாணவர்களில் 14,313 பேரும், தேர்வு எழுதிய 17,897 மாணவிகளில் 16,264 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களை நோக்கும்போது கடந்த சில ஆண்டுகளாக இவற்றில் சதம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை தேர்வு முடிவுகள் காட்டுகின்றன.
கணிதத்தில்...: 2007-ம் ஆண்டில் தேர்வெழுதிய மாணவர்களில் 119 பேர் சதம் எடுத்தனர். 2008-ம் ஆண்டில் இது 473 ஆக உயர்ந்தது. ஆனால், 2009-ம் ஆண்டில் இது 356 ஆகக் குறைந்து, தற்போது இந்தாண்டு 108 என்ற அளவில் இரு மடங்கு
குறைந்துவிட்டது.
அறிவியல் பாடத்தில்...: 10-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் சதம் எடுப்பவர்களின் எண்ணிக்கை 2007-ம் ஆண்டில் வெறும் 3 பேர் என்ற நிலை இருந்தது. ஆனால், 2008-ம் ஆண்டில் இது 107 ஆக அதிகரித்து, 2009-ம் ஆண்டில் இது 123 ஆக நல்ல வளர்ச்சியை எட்டியது. ஆனால், தற்போது இதவும் 64 ஆகக் குறைந்துவிட்டது.
சமூக அறிவியலில் முன்னேற்றம்: எனினும், சமூக அறிவியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் எடுப்போரின் எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
அதாவது 2007-ம் ஆண்டில் பூஜ்யமாக இருந்த நிலை மாறி 2008-ம் ஆண்டில் 5 பேர் இந்தப் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தனர். 2009-ம் ஆண்டில் இது ஒன்றாக குறைந்தது. தற்போது இந்தாண்டு 13 மாணவ, மாணவியர் இந்தப் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மதுரை வருவாய் மாவட்டத்தில் இந்தாண்டு மொத்தம் 185 பேர் சதம்
எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இது 480 ஆகவும், அதற்கு முந்தைய ஆண்டு 585 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாடவாரியாக தோல்வியுற்றவர்கள்: அதேபோன்று பாடவாரியாக தோல்வியுற்றவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது கடந்த 4 ஆண்டுகளில் தமிழில் பாடத்தில் தோல்வியுறுவோரின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருப்பதை தேர்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. அதேவேளையில் கணிதம், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது.
தமிழில்...: தமிழ்ப் பாடத் தேர்வு எழுதிய மொத்த மாணவ, மாணவியரில் 2007-ம் ஆண்டில் 774 பேரும், 2008-ம் ஆண்டில் 826 பேரும், 2009-ம் ஆண்டில் 1,399 பேரும், இந்தாண்டில் 1051 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
ஆங்கிலத்தில்....: 2007-ம் ஆண்டில் 2506 பேரும், 2008-ம் ஆண்டில் 2169 பேரும், 2009-ம் ஆண்டில் 1886 பேரும், நடப்பாண்டில் 2396 பேரும் தோல்வி அடைந்துள்ளனர்.
கணிதத்தில்....: 2007-ம் ஆண்டில் 1,735 பேரும், 2008-ம் ஆண்டில் 1198 பேரும், 2009-ம் ஆண்டில் 1,887 பேரும், 2010-ம் ஆண்டில் 1,564 பேரும்
தேர்ச்சியடையவில்லை.
அறிவியலில்...: 2007-ம் ஆண்டில் 3,428 பேரும், 2008-ம் ஆண்டில் 2,397 பேரும், 2009-ம் ஆண்டில் 2,656 பேரும், 2010-ம் ஆண்டில் 3276 பேரும் தோல்வி
கண்டுள்ளனர்.
சமூக அறிவியலில் ...: சமூக அறிவியல் பாடத்தில் 2007-ம் ஆண்டில் 1061 பேரும், 2008-ம் ஆண்டில் 1260 பேரும், 2009-ம் ஆண்டில் 977 பேரும் தோல்வி அடைந்திருந்த நிலையில், நடப்பாண்டில் அதிகபட்சமாக 1,117 மாணவ, மாணவியர் தோல்வி அடைந்துள்ளனர்.
அறிவியல், கணிதம், கணிதம், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் அதிகளவில் இந்தாண்டு மாணவ, மாணவியர் தோல்வி அடைந்துள்ளதால் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...