மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

வறண்டு கிடக்கும் 15 கிராம ஏரிகள்

செஞ்சி : செவலபுரை தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறந்து விடாததால் செஞ்சி தாலுகாவில் உள்ள 15 கிராமங்களில்  ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. ÷விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள பாக்கம் மலை,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:41 pm

ஜெ.பாபு

செஞ்சி : செவலபுரை தடுப்பணையின் மதகுகளை அதிகாரிகள் திறந்து விடாததால் செஞ்சி தாலுகாவில் உள்ள 15 கிராமங்களில்  ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

÷விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள பாக்கம் மலை, மேல்மலையனூர் பகுதிகளில் பெய்யும் மழைநீர் தென்பாலை கிராமத்துக்கு அருகே ஒன்றாக கலந்து வராகநதியாகி உருவாகி கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

÷வராகநதி காட்டாறு ஆகும். பருவ மழைக்காலங்களில் பாய்ந்தோடி வரும் நீரை தடுப்பணைகள் மூலம் தடுத்து நிறுத்தி விவசாயத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. பாக்கம் மலையில் இருந்து சுமார் 566 மீட்டர் (கடல் மட்டத்திலிருந்து) உயரத்தில் இருந்து உற்பத்தியாகி, செஞ்சி வட்டத்தில் வராகநதியாகவும் பின்னர் சங்கராபரணி ஆறாகவும் ஓடி பயன் தருகிறது.

÷வராகநதியின் நீளம் 78.50 கி.மீ. ஆகும். இந்நதியின் குறுக்கே செஞ்சி வட்டத்தில் சத்தியமங்கலம், தென்பாலை, செவலபுரை, கூடப்பட்டு, மொடையூர், செவலபுரை ஆகிய பகுதிகளில் 6 தடுப்பணைகளும்; திண்டிவனம் வட்டத்தில் உள்ள ரெட்டணை, நெடிமொழியனூர், பேரணி பகுதிகளில் 3 தடுப்பணைகளும் கட்டப்பட்டுள்ளன. இவை நிரம்பியதும் இறுதியாக வராகநதி நீர் வீடூர் அணையை வந்தடைகிறது. பின்னர் புதுச்சேரியில் அருகே வங்காளவிரிகுடா கடலில் கலக்கிறது.

÷இந்த நதியின் குறுக்கே செஞ்சி வட்டம் மேலச்சேரி- செவலபுரை கிராமங்களுக்கு இடையே காமராஜர் ஆட்சிக் காலத்தில் 34 ஆண்டுகளுக்கு முன் செவலபுரை தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டு இதுவரை விவசாய நிலங்கள் முழுமையாக பயன் பெறவில்லை. செவலபுரை தடுப்பணையில் இருந்து செல்லும் கால்வாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இக் கால்வாயை சீர் செய்வதாக கூறி பல லட்சங்கள் ஊழல் நடந்துள்ளதாகவும் விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

÷இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த செல்லபிராட்டி, மேல்களவாய், நெகனூர், பெரும்புகை, வடவானூர், நங்கிலிகொண்டான், ஆனத்தூர், விற்பட்டு, கடம்பூர், ஆனாங்கூர், கொரவனந்தல், களையூர், நாட்டார்மங்கலம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஏரிகள், குளங்கள் நிரம்பி ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்; மூன்று போகமும் விளையும்.

÷ஆனால், விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் அடைய இத்தகைய மகத்தான வழி இருந்தும் கால்வாய் சரியில்லை என்று கூறி தண்ணீரை மதகுகளின் வழியாக திறந்துவிட்டு ஏரிகளை நிரம்பச் செய்யாமல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர்.

÷இதனால் ஆற்றில் வரும் வெள்ளநீர் தடுப்பணையைத் தாண்டி வழிந்து வீணாகிறது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், பொறுப்பற்ற தன்மையுமே காரணமாகும் என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.