சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கோடிக்கரை - தஞ்சை சாலை தேசிய நெடுஞ்சாலையாகுமா?

திருத்துறைப்பூண்டி : நாகை மாவட்டம், கோடிக் கரையில் இருந்து தஞ்சாவூர் வரை 110 கி.மீ. தொலைவுக்கு உள்ள மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என, இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:21 pm

ஏ. ரவி

திருத்துறைப்பூண்டி : நாகை மாவட்டம், கோடிக்

கரையில் இருந்து தஞ்சாவூர் வரை 110 கி.மீ. தொலைவுக்கு உள்ள மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என, இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோடிக்கரையில் இருந்து தஞ்சை வரை செல்லும் இந்தச் சாலை, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக விளங்கிய தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் பயன்படுத்தி வரும் பிரதான சாலையாகும். இந்தச் சாலை வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர் வழியாக தஞ்சாவூர் வரை செல்கிறது.

வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி பகுதி மக்கள் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்ல இந்தச் சாலை மிகவும் முக்கியமானதாக விளங்கி வருகிறது.

கன்னியாகுமரியில் முக்கடல்கள் சங்கமிப்பதைப்போல, பாக்ஜலசந்தியும், வங்காள விரிகுடா கடலும் இணைகிற சிறப்பு வாய்ந்த பகுதியாக கோடிக்கரை விளங்கி வருகிறது. உலகின் சிறந்த வனவிலங்கு, பறவைகள் சரணாலயமும் இங்கு உள்ளது.

ராமாயண காவியத்திலும் இந்தப் பகுதி பிரதான பங்கு வகிக்கிறது. ராமர் சீதையைத் தேடி இங்கு வந்த போது, மணல் குன்றின் மீது ஏறி நின்று இலங்கையை உற்று நோக்கிய இடம் ராமர் பாதம் என அழைக்கப்படுகிறது.

இந்த இடத்தைப் பார்க்கவும், ஆடி, தை, மகாளய அமாவாசை தினங்களில் கோடிக்கரை கடலில் புனித நீராடி, முன்னோரை வழிபடவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும், வேதாரண்யம், கோடிக்கரை, ஆறுகாட்டுத்துறை கடல் பகுதி மீன்வளம் நிறைந்த பகுதி. இங்கு பிடிக்கப்படும் அரியவகை கடல் மீன்கள் கோடியக்கரை- தஞ்சை நெடுஞ்சாலை வழியாகத்தான் சேலம், திருச்சி, கோவை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

தற்போது ரயில் வசதி தடை செய்யப்பட்டுள்ளதால், இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பை நாள்தோறும் ஏற்றிச் செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளும், சவுக்கு மரங்கள், சிலிகேட் மணல் லாரிகளும் இந்தச் சாலை வழியாகத்தான்  செல்லவேண்டும்.

இவற்றோடு, மருத்துவச் சிகிச்சையில் சிறந்து விளங்கும் தஞ்சைக்கு, தீவிர சிகிச்சைக்காக நோயாளிகள் அவசரமாகச் செல்லவும், வெளிநாடுகளுக்குச் செல்வோர் திருச்சி விமான நிலையம் செல்லவும் இந்தச் சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

எனவே, மாநில நெடுஞ்சாலையாக உள்ள இந்தச் சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் விளைவாக, வாகனப் போக்குவரத்து குறித்த ஆய்வுப் பணிகள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலை அமைக்காமல் தங்களது கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருச்சி- தஞ்சை- நாகப்பட்டினம் சாலை நான்கு வழித்தடச் சாலையாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலைப் பணிகள் நிறைவடைந்து, விரைவில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட உள்ளது. இந்த நிலையில், கோடிக்கரை- தஞ்சை சாலையும் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டால், இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார மேம்பாடும் அடைய அது வழிவகுக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.