மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

2000 ரேஷன் கார்டுக்கு 2 கடை ?

செஞ்சி, செப்.  6:  செஞ்சி வட்டம் அவலூர்பேட்டையில் உள்ள 2150 ரேஷன் கார்டுக்கு 2 ரேஷன் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் சொல்லில் அடங்கா துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ÷செஞ்சி வட்டத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:23 pm

ஜெ.பாபு

செஞ்சி, செப்.  6:  செஞ்சி வட்டம் அவலூர்பேட்டையில் உள்ள 2150 ரேஷன் கார்டுக்கு 2 ரேஷன் கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் பொதுமக்கள் சொல்லில் அடங்கா துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

÷செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த அவலூர்பேட்டை பேரூராட்சியாக தரம் உயர்த்த அனைத்து தகுதிகளையும் கொண்ட பகுதியாகும். இங்கு காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு உயர்நிலைப் பள்ளி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள் உள்ளன.

÷இந்நகரத்தில் 2150 ரேஷன் கார்டுகள் உள்ளன. சராசரியாக 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்று கணக்கிட்டால் 4 ரேஷன் கடைகள் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது இங்கு 2 ரேஷன் கடைகள் மட்டுமே உள்ளன.

÷இதனால் காலையில் அரிசி வாங்க சென்றால் மாலையில் வீடு திரும்பும் அவல நிலை உள்ளது. இதனால் உணவுப் பொருள்களை கால் வலிக்க காத்திருந்து வரிசையில் நின்று வாங்கிச் செல்லும் துயரநிலையை குடும்ப அட்டைதாரர்கள் அனுபவித்து வருகின்றனர்.

 ஆனால் எந்த அரசு அதிகாரிகளும் மக்களின் அவதியைப் பற்றி கவலைப்படவில்லை.

 கடந்த சில தினங்களுக்கு முன் அரசின் இலவச டிவிக்களை வழங்கும்போது பெரும் பிரச்னை ஏற்பட்டது.

÷இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், "அவலூர்பேட்டை நகர வளர்ச்சியில் யாரும் அக்கறை காட்டுவதில்லை. அவலூர்பேட்டையில் வருவாய் அலுவலகம் உள்ளது. செஞ்சியில் இருந்து 27 கி.மீ. தூரம் உள்ள அவலூர்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் உள்ளது.

÷மேலும் பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அவலூர்பேட்டையை தனி ஊராட்சி ஒன்றியமாக உருவாக்க வேண்டும்.

÷பஸ் நிலையம் மற்றும் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை ஆகியவற்றை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இதற்காக மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் அக்கறை செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.