தொகுதி - ஓர் அறிமுகம்!

* தொகுதி பெயர் :ஆலந்தூர் * தொகுதி எண் : 28 * அறிமுகம் : எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தது பரங்கிமலை. இந்தத் தொகுதிதான் பின்னர் 1977-ல் ஆலந்தூர் தொகுதியாக மாறியது. தற்போதைய தொகுத
Published on
Updated on
1 min read

* தொகுதி பெயர் : ஆலந்தூர்

* தொகுதி எண் : 28

* அறிமுகம் : எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாக இருந்தது பரங்கிமலை. இந்தத் தொகுதிதான் பின்னர் 1977-ல் ஆலந்தூர் தொகுதியாக மாறியது. தற்போதைய தொகுதி மறுசீரமைப்பில் ஆலந்தூர் தொகுதியில் பெரியளவில் மாற்றம் செய்யப்படவில்லை. இதுவரை 10 முறை இந்தத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 முறை திமுகவும் (1967, 71, 84, 89, 96, 2006), 4 முறை அதிமுகவும் (1977, 80, 91, 2001) வெற்றிப் பெற்றுள்ளன. இந்தத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வாக தா.மோ.அன்பரசன் உள்ளார். இந்தப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் காயத்ரி தேவியும், தேமுதிக சார்பில் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரனும் போட்டியிடுகின்றனர்.

* எல்லை :

ஆலந்தூர் நகராட்சியின் 42-வார்டுகள். மேலும் மணப்பாக்கம்,மௌலிவாக்கம் உட்பட 17 ஊராட்சிகளும் அடங்கியது.

* தொகுதியின் எம்.எல்.ஏ.க்கள்:

1977 அப்துல்ரசாக் (அதிமுக)

1980 அப்துல்ரசாக் (அதிமுக)

1984 ஆபிரகாம் (திமுக)

1989 சி.சண்முகம் (திமுக)

1991 அண்ணாமலை (அதிமுக)

1996 சி.சண்முகம் (திமுக)

2001 பா.வளர்மதி (அதிமுக)

2006 தா.மோ.அன்பரசன் (திமுக)

* வாக்காளர்கள் :

ஆண்: 1,16,214

பெண்: 1,14 ,266

மொத்தம் : 2,30,480

* வாக்குச்சாவடிகள் : மொத்தம் : 250

* தேர்தல் நடத்தும் அலுவலர்/ தொடர்பு எண்:

கே. தேவதாஸ் போஸ், துணை ஆட்சியர் (நில ஆர்ஜிதம்) 9443957021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com