அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிளஸ் 2 உயிரியல் பாடத் தேர்வு: ஒரு வினாவுக்கு இரு விடைகளால் மாணவர்கள் குழப்பம்

ராமநாதபுரம், மார்ச் 29: பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு உயிரியல் பாட வினாத்தாளில் இடம் பெற்ற ஒரு வினாவுக்கு இரண்டு விடைகள் உள்ளதால் எந்த விடை சரியானது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.  தமிழகத்தில் கட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:01 am

சி.வ.சு.ஜெக​ஜோதி​

ராமநாதபுரம், மார்ச் 29: பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு உயிரியல் பாட வினாத்தாளில் இடம் பெற்ற ஒரு வினாவுக்கு இரண்டு விடைகள் உள்ளதால் எந்த விடை சரியானது என்ற குழப்பத்தில் மாணவர்கள் உள்ளனர்.

 தமிழகத்தில் கடந்த 8-ம் தேதி தொடங்கிய பிளஸ்-2 தேர்வுகள் வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 30) நிறைவு பெறுகின்றன. உயிரியல் பாடத் தேர்வு கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. இதில் உயிர்-விலங்கியலில் பிரிவு "ஆ' பகுதியில் (3 மதிப்பெண் வினாக்கள்) கேட்கப்படும் 12 கேள்விகளில் ஏதேனும் 8-க்கு மட்டும் பதில் எழுதினால் போதுமானது.

 இந் நிலையில், 26-ம் தேதி உயிரியில் வினாத் தாளில் இந்தப் பிரிவில் 19-வது வினாவாக டிரான்ஸ்டக்சன் என்றால் என்ன? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது.

 ஆனால், இந்தக் கேள்விக்குப் பாடப் புத்தகத்தில் இரு இடங்களில் வெவ்வேறு பதில்கள் இருப்பது மாணவர்களை இப்போது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

 டிரான்ஸ்டக்சன் என்ற கேள்விக்குப் புத்தகத்தில் பக்கம் 61, பக்கம் 99 ஆகிய இரண்டு இடங்களில் வெவ்வேறு பதில்கள் இடம்பெற்றுள்ளன.

 ஒரே கேள்விக்கு இரண்டு பதில்கள் இருப்பதால் எந்த பதிலுக்கு முழு மதிப்பெண் கிடைக்கும் என்ற கேள்வி மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இரண்டு பதில்களில் ஏதேனும் ஒன்றை ஒரு மாணவர் எழுதியிருந்தால் அவருக்கு மதிப்பெண் கிடைக்குமா என்று கேள்வி எழுப்புகிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவியின் தாயாரும், மருத்துவருமான ச.சுமதி.

 நான் ஏதேச்சையாக பாடப் புத்தகத்தைப் படித்தபோது இந்தப் பிரச்னை தெரிய வந்ததாகக் கூறும் சுமதி, இரு பதில்களுமே சரியானதுதான் என்ற நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் உள்ள ஆசிரியர்கள், விடைக்குறிப்பில் (கீ நோட்ஸ்) கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு விடைக்கு மட்டுமே மதிப்பெண் வழங்குவார்கள். இதனால், ஏராளமான மாணவர்களுக்கு 3 மதிப்பெண்கள் குறைந்து, அவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என்றார்.

 இது குறித்து உயிரியல் பாட ஆசிரியர்கள் கூறும்போது, ஒரு கேள்விக்கு இரு பதில்கள் இருப்பது உண்மைதான். ஆனால் 19-வது கேள்வியாக இடம் பெற்றிருப்பதால் அது 2-வது பாடமான மைக்ரோ பயாலஜி பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ள கேள்வியாகத்தான் கருத வேண்டுமே தவிர, 4-வது பாடமான நவீன மரபியலில் இருந்து கேட்கப்பட்ட கேள்வியாகக் கருத முடியாது.

 எந்தெந்தப் பாடத்தில் இருந்து கேட்கப்படும் வினா, எத்தனையாவது வினாவாக வரும் என்பது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும்.

 இருப்பினும் இந்த விஷயத்தில் விடைத்தாள் திருத்துபவர்களுக்கு வழங்கப்படும் விடைக்குறிப்பில் எந்த விடை இடம் பெற்றுள்ளதோ அந்த விடையை எழுதியுள்ள மாணவருக்கே மதிப்பெண் வழங்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.