

கடலூர், மே 5: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பால் விரிந்து கிடந்த மணல் பரப்பின் அளவு குறைந்து வருகிறது.
சென்னை மெரினா கடற்கரைக்கு அடுத்தபடியாக நீளமான, அழகான மணல்பரப்பைக் கொண்டது கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் கடற்கரை. 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டது முதல் அடிக்கடி கடலில் திடீரென அரிப்பு, சீற்றம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் கடற்கரையோரம் உள்ள மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்தால் நீர் உட்புகுந்து அவ்வப்போது சேதத்தை ஏற்படுத்துகிறது.
கடல் நிலைகளில் ஏற்படும் மாற்றத்தால் சில்வர் பீச்சின் மணல் பரப்பு குறைந்து வருகிறது. இதனால் கடற்கரை ஓரத்தில் ஆழத்தையும் ஏற்படுத்திவருகிறது.
கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் முக்கிய இடமாக திகழ்ந்துவந்த கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், சுனாமிக்கு பிறகு சுமார் அரை கி.மீ. தூரம் உள்ள மணல் பரப்பு கடலுக்குள் சென்றுவிட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.