தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

திருநங்கைக்கு 7 ஆண்டு சிறை

காஞ்சிபுரம் நீதிமன்றம் திருநங்கை ஒருவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Updated On :1 மார்ச் 2013, 8:49 pm

காஞ்சிபுரம் நீதிமன்றம் திருநங்கை ஒருவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

 சென்னையை அடுத்த திருநின்றவூர் கிருஷ்ணன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (30). திருநங்கை. இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு மே 7-ம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த ஒரிக்கை அன்னை சத்தியா நகர் பகுதியைச் சேர்ந்த வினோத் (எ) செல்வகுமாரிடம் (26) பாலுறவுக்கு பேரம் பேசினாராம். அப்போது வினோத் ரூ. 150 தருவதாக ஒத்துக்கொண்டாராம். இதைத் தொடர்ந்து இருவரும் காஞ்சிபுரம் உதயம் தியேட்டர் அருகே உள்ள முட்புதருக்கு சென்றுள்ளனர். அங்கு பாலுறவுக்கு பிறகு பேசியபடி ரூ. 150 கொடுக்க வினோத் மறுத்தாராம்.

 இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் உடைந்து கிடந்த சிமெண்ட் சிலாப்பால் வினோத்தை தலை மற்றும் முகத்தில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, திருநங்கை சங்கரை கைது செய்து காஞ்சிபுரம் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் அய்யம்பேட்டை சம்பத் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி சோமசேகரன் திருநங்கை சங்கருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து சங்கர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.