தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மேட்டூர்  நீர்மட்டம் 2 நாளில் 2.26 அடி குறைந்தது

மேட்டூரிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் 2

News image
Updated On :1 மார்ச் 2013, 8:44 pm

மேட்டூரிலிருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் 2 நாளில் 2.26 அடி குறைந்தது.

 காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிவடைந்ததும், ஆண்டுதோறும் ஜனவரி 28ஆம் தேதி அணையிலிருந்து பாசனத் தேவைக்காகத் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும். இதையடுத்து, குடிநீர்த் தேவைக்காக மட்டுமே அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

இந்த நிலையில், நிகழாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி முடிந்த நிலையில், அணையிலிருந்து புதன்கிழமை முதல் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

 அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 324 கன அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டதால், புதன்கிழமை 33.99 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், வியாழக்கிழமை 32.91 அடியாகவும், வெள்ளிக்கிழமை 31.73 அடியாகவும் குறைந்தது.

 அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 2 நாள்களில் நீர்மட்டம் 2.26 அடி குறைந்தது. தற்போது அணையின் நீர் இருப்பு 8.23 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.