தமிழக நூலகத் துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் (88) கம்பம் நகரில் திங்கள்கிழமை மாலை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சின்னமனூரில் 1925 ஜூன் 10ம் தேதி பிறந்த வே.தில்லைநாயகம், நூலகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 1949-ல் பொதுக்கல்வித் துறை இயக்க முதல் நூலகர் ஆனார். 1962-ல் கன்னிமாரா பொது நூலகத்தில் நூலகரானார். 1972-ல் தமிழக அரசு பொதுநூலகத் துறையின் முதல் இயக்குநராக உயர்ந்து 1982-ல் ஓய்வு பெற்றார்.
நூல்கள் பல எழுதியுள்ளார். இவர் எழுதிய "நூலக உணர்வு' (1971), "வள்ளல்கள் வரலாறு' (1975), "இந்திய நூலக இயக்கம்' (1978) முதலிய நூல்கள் தமிழ்நாடு அரசின் முதல் பரிசு பெற்றவை. "இந்திய நூலக இயக்கம்' என்ற நூலைப் பாராட்டி 1982-ல் உலகப் பல்கலைக் கழகம், அவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இவருக்கு மனைவி கோமதியம்மாள், மகன் அருள்வேலன், மகள் அன்பரசி உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கம்பத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு:04554 - 271597.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசியப் போட்டிக்கான இந்திய பாட்மின்டன் அறிவிப்பு: பி.வி. சிந்து, சாத்விக் - சிராக் பங்கேற்பு
தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைது

திமுகவை பின்பற்றிதான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்







