வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மதுக்கடை பூட்டை உடைத்து ரூ. 2.57 லட்சம் கொள்ளை

அரியலூர் அருகே, ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்தைக்

Updated On :12 மார்ச் 2013, 12:44 am IST

அரியலூர் அருகே, ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சத்து 57 ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்ற நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் - செந்துறை நெடுஞ்சாலை அருகேயுள்ள அரசின் டாஸ்மாக் மதுக்கடை விற்பனையாளரான வீரமணி, ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டிவிட்டு, அதனருகேயுள்ள மதுக் கூடத்தில் தூங்கிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, நள்ளிரவில் மதுக் கடையில் சப்தம் கேட்டதை அறிந்த அவர் அங்கு சென்று பார்த்தபோது, கடையின் பூட்டை உடைத்துக் கொண்டிருந்த மூவர் வீரமணியைத் தாக்கி, அவரைக் கட்டிப்போட்டுள்ளனர்.  பின்னர், கடையில் இருந்த லாக்கரை தூக்கிச் சென்றனராம். அதில் ரூ. 2 லட்சத்து 57 ஆயிரம் இருந்ததாம்.

புகாரின் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு திங்கள்கிழமை சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் சென்று தடயங்களைப் பதிவு செய்தனர். சம்பவம் குறித்து மதுக்கடை மேற்பார்வையாளர் பழனிசாமி அளித்த புகாரின்பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.