சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பள்ளிக் கல்வி: சிறப்புத் திட்டங்களுக்கு ரூ.1,300 கோடி 98 லட்சம் மாணவர்களுக்கு ரூ.217 கோடியில் புத்தகங்கள்

பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.

News image
Updated On :22 மார்ச் 2013, 2:00 am IST

பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:

2013-2014-ல் 97.70 லட்சம் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் 86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க ரூ.110.96 கோடி, 14.02 லட்சம் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்க ரூ.323.70 கோடி, 53.53 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்குவதற்காக ரூ.353.22 கோடி, 13 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப் பை  வழங்க ரூ.19.79 கோடி, 6.1 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் வழங்க ரூ.8.47 கோடி, 9.67 லட்சம் மாணவர்களுக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்க ரூ. 6.65 கோடி, 6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்க ரூ.200.98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கம்பளி ஆடைகள்: மலைப் பகுதிகளில் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடை வழங்க ரூ.4.12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாணவியர்களுக்கு 32.79 லட்சம் சானிடரி நாப்கின்கள் வழங்க ரூ.54.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் மூலமாக மாநில அரசுக்கு மொத்தமாக ரூ.1,299.74 கோடி செலவு ஏற்படும் என நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.