ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடியில் கடல்வாழ் உயிரினக் காட்சியகம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக்

News image
Updated On :21 மார்ச் 2013, 8:47 pm

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்த பட்ஜெட் அறிவிப்பு:

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு சுற்றுலா சுற்றமைப்பு மற்றும் தென்னகச் சுற்றுலா சுற்றமைப்பு ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட சுற்றுலாத் தலங்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் சிறப்புத் திட்டம் ரூ. 450 கோடி செலவில் 2012-13-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுபோல் 2013-14-ம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட சுற்றுலா மையங்களில் இத்திட்டத்தின் மூலம் ரூ. 67.91 கோடியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

"தமிழ்நாட்டுக்குச் செல்வோம் 2014' என்ற உத்தியின் அடிப்படையில் சுற்றுலா மேம்பாட்டுக்கான விளம்பரப் பணிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2013-14-ம் நிதியாண்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ. 153.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினக் காட்சியகம்: மீன்வளத் துறையின் தொழில்நுட்ப உதவியோடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் மாமல்லபுரத்தில் ரூ. 250 கோடி செலவில் உலகத் தரத்திலான கடல்வாழ் உயிரினக் காட்சியகம் அமைக்கப்படும்.

இதுபோல் அரியலூரில் தொல்படிவப் பொருள் அருங்காட்சியகம் ரூ. 2 கோடி செலவில் அமைக்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு ரூ. 2 கோடி: தமிழ் வளர்ச்சித் துறைக்கென 2013-14 நிதியாண்டில் ரூ. 39.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சிறப்பு மானியமாக ரூ. 2 கோடி வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.