ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

10 பாலிடெக்னிக், 2 பொறியியல் கல்லூரி தொடங்க அரசு முடிவு

நடப்பாண்டில் 2 அரசு பொறியியல் கல்லூரிகள், 10 பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகள்  தொடங்க

Updated On :21 மார்ச் 2013, 8:20 pm

நடப்பாண்டில் 2 அரசு பொறியியல் கல்லூரிகள், 10 பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகள்  தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து சட்டப் பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2013-2014-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டாண்டுகளில் 22 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளையும், ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியையும் அரசு திறந்துள்ளது. மேலும், 10 புதிய அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும், இரண்டு புதிய அரசுப் பொறியியல் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

2013-2014-ம் கல்வியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப ஆய்வு  நிறுவனம், திருச்சியில் உள்ள பாரதிதாசன் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் செயல்படத் தொடங்கும். மேலும் கூடுதலாக 8 கலை -அறிவியல் கல்லூரிகள் நடப்பாண்டில் செயல்படத் தொடங்கும். 2010-2011-ல், 6,09,915 ஆக இருந்த உயர் கல்வி மாணவர்களின் சேர்க்கை, 2012-2013-ல் 6,51,807 ஆக உயர்ந்துள்ளது. 2012-2013-ல் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டணத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் ரூ.518 கோடி வழங்கப்பட்டுள்ளது.  2013-2014-ல் இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ.673 கோடியாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிக்கணினி: வரும் நிதியாண்டில் மாணவர்களுக்கு 5.65 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும். இதற்காக ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாடு: 2012-2013-ல் சென்னையில் புதிய ஓடுதளங்கள் அமைக்கவும், நேரு விளையாட்டு அரங்கத்தை மேம்படுத்தவும் ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டது. 2010-2011-ல் ரூ.31.26 கோடியாக இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறைக்கான மொத்த ஒதுக்கீடு 2013-2014-ல் ரூ.112.50 கோடியாக  உயர்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.