வரும் நிதியாண்டில் 1.5 லட்சம் ஏழைப் பெண்களுக்கு 6 லட்சம் ஆடுகள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பட்ஜெட் அறிவிப்புகள்:
கால்நடை பராமரிப்புத் துறைக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. 2013-2014-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இத்துறைக்கு ரூ. 1,082.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2010-2011-ம் ஆண்டின் ஒதுக்கீட்டைவிட 240 சதவீதம் கூடுதலாகும்.
விலையில்லா கறவைப் பசுக்கள்: விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 24,000 கறவைப் பசுக்களும், 10 லட்சம் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றி சகாப்தத்தைத் தொடரும் வகையில் 2013-2014-ம் ஆண்டில் 12,000 கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு 6 லட்சம் செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளும் வழங்கப்படும். இதற்காக ரூ. 250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தீவனப் பெருக்கத் திட்டத்தில் 50,000 ஏக்கர் பரப்பு பசுந்தீவன உற்பத்தியின் கீழ் வெற்றிகரமாக கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான ஒதுக்கீடு ரூ. 25 கோடியாக உயர்த்தப்பட்டு, 2013-2014-ம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மரத்தீவனப் பயிர்களும் இத்திட்டத்தில் ஊக்குவிக்கப்படும்.
கால்நடை மருத்துவ மேம்பாட்டுக்கு ரூ.235 கோடி:
இரண்டாவது வெண்மைப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் கால்நடை மருத்துவத் துறைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக ரூ. 235 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் ஏறத்தாழ 1,500 கால்நடை மருத்துவ நிலையங்களில் சீரமைப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 585 துணை மையங்கள் கால்நடை மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் 303 கால்நடை ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே அறிவித்தபடி திருநெல்வேலியிலும் ஒரத்தநாட்டிலும் இரண்டு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
2013-2014-ம் ஆண்டில் மேலும் 100 கால்நடை துணை நிலையங்கள் கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 450 கால்நடை மருத்துவமனைகளில் ரூ.115 கோடியில் கட்டடங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வரவு-செலவுத் திட்டத்தில் தற்போதுள்ள கால்நடை மருத்துவமனைகளை மேலும் சீரமைக்க ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆவின் செயல்பாடு: மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் பால் கொள்முதல், உயர் உற்பத்திக் காலங்களில் நாளொன்றுக்கு 27.14 லட்சம் லிட்டர் என்ற அளவை எட்டியுள்ளது. பால் பதப்படுத்தும் திறனை அதிகரிக்க சென்னை பால் பண்ணைகள் மற்றும் பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும்.
பால் உற்பத்திச் சங்கங்கள் மூலம் கால்நடைத் தீவனத்தை வழங்க ஈரோட்டிலுள்ள கால்நடைத் தீவன உற்பத்தித் தொழிற்சாலை ரூ. 14 கோடியில் புனரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோழி வளர்ப்புக்கு ரூ. 25 கோடி: ஒசூரில் ரூ. 45.96 கோடியில் கோழி உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கோழி வளர்ப்பு பிரபலமாகாத பகுதிகளிலும் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் நல்ல பலன்களை அளிக்கத் தொடங்கியுள்ளன. 2013-2014-ம் ஆண்டிலும் இத்தகைய பகுதிகளில் கோழி வளர்ப்பை ஊக்குவிக்க ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்

புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு: யாருக்கு லாபம்?

விவசாயிகளின் கனவு: சுசீந்திரம் பழையாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படுமா?
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


