வரும் நிதியாண்டுக்கான (2013-2014) தமிழக பட்ஜெட்டை பல்வேறு தொழில், வர்த்தக சங்கங்கள், அரசுப் பணியாளர் சங்கங்கள் வரவேற்றுள்ளன.
தொழில் முனைவோர்களுக்கான திறன் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு, தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம், ஓய்வூதியதாரர் குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரமாக உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை பல்வேறு சங்கங்கள் வரவேற்றுள்ளன.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தல் உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்த் தொழில் வர்த்தக சபை: தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது. தொழில் முனைவோர் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். வேளாண் துறை, மின்சாரம், கல்வித் துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தென்னிந்திய தொழில் வர்த்தக சபை: மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் நெல் சாகுபடிப் பரப்பை அதிகரித்தது வேளாண் துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
மின்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம், சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் உள்ளிட்டவை பட்ஜெட்டின் சிறப்பம்சங்களாகும்.
தொழில் வளர்ச்சிக்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலவங்கி அமைப்பது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான புதிய அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புதிய வரி விதிப்புகள் இல்லாமல் இருப்பதால் மக்களுக்கு சுமை இல்லாத பட்ஜெட்டாக விளங்குகிறது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம்: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாநில அரசின் வருவாயில் 22 சதவீதத்துக்கும் மேல் டாஸ்மாக் கடைகளின் மூலம் கிடைக்கிறது. ஆனால் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி: தமிழக பட்ஜெட்டில் அரசு அலுவலர்கள், ஆசிரியர் நலன் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை. இடைநிலை ஆசிரியர் நியமனம் குறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம்: தொழில் முனைவோர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு, மின்திட்டங்களுக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை. புதிய வரிவிதிப்புகள் இல்லாதது பாராட்டத்தக்கது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டர்களுக்கான டீசலுக்கு வாட் வரி மீது விலக்கு அளிக்க வேண்டும்.
தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக பட்ஜெட் அமைந்துள்ளது. மின்உற்பத்தியை அதிகரிப்பதற்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் பரிசீலிக்கப்படவில்லை. குறைந்த ஊதியம் பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றமளித்துள்ளது.
தமிழக பட்ஜெட்டுக்கு தேசிய சிறு தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிறுதொழில்கள் மற்றும் வணிக முனைவோர் சங்கம், தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் பட்ஜெட் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


