தமிழகத்தில் நடைமுறையில் உள்ள நில வழிகாட்டி மதிப்பு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையின் இணைப்புப் பகுதியில் எதிர்காலக் கணிப்புகள் என்ற தலைப்பின் கீழ் இந்த விவரம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவழிகாட்டி மதிப்புகள் மிகக் குறைவாக இருந்தன. அதாவது வெளிச்சந்தை மதிப்பைக் காட்டிலும் அரசின் நில வழிகாட்டி மதிப்பீடுகள் மிகக் குறைவாக இருந்தன. இதையடுத்து, வழிகாட்டி மதிப்பை திருத்தி அமைக்க பதிவுத் துறை முடிவு செய்தது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வழிகாட்டி மதிப்பு மாற்றி அமைக்கப்பட்டன. புதிய வழிகாட்டி மதிப்புகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் இது குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வழிகாட்டி மதிப்பீட்டு உயர்வை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்க அரசு முடிவு செய்துள்ளது. எனினும் வரும் நிதியாண்டில் முத்திரைத்தாள் தீர்வை மற்றும் பதிவு மூலமாகக் கிடைக்கும் வரவுகள் 15.93 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி நடப்பு நிதியாண்டில் பெறப்பட்ட ரூ.8,516 கோடி வருவாய் வரும் நிதியாண்டில் ரூ.9,874 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நூறு சாமி திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பை: ஸ்மிருதி மந்தனா அரைசதம்; பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!

மக்களை நாய் என்றேனா? என் தாய்க்கு இணையானவர்கள் : ராகவா லாரன்ஸ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


