சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பழிவாங்கும் நடவடிக்கையா? கருணாநிதி பதில்

மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம்,

News image
Updated On :22 மார்ச் 2013, 1:40 am IST

மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்பட்டதாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

அதே சமயம் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பழிவாங்கும் நடவடிக்கையாகவே தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

வெளிநாட்டு கார் வாங்கியது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வீட்டில் நடைபெற்ற சோதனை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியது:

மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது தவறு என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

சோதனை தனக்குத் தெரியாமல் நடந்துள்ளது என்று மத்திய அமைச்சரே கூறியுள்ள நிலையில் அதை நம்ப முடியாது என்று என்னால் சொல்ல முடியாது.

பொதுவாக திமுகவைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடவடிக்கைகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

பழி வாங்கும் அரசியல் தில்லியில் மட்டுமில்லாமல் தமிழகத்திலும் இருக்கிறது என்றார் கருணாநிதி.

கூட்டணியிலிருந்து விலகிய காரணத்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை இது என்று நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் கேட்டதற்கு, உங்கள் கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றார் கருணாநிதி.

பழிவாங்கும் நடவடிக்கை: தனது வீட்டில் சோதனை நடைபெற்றது தொடர்பாக செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது:

பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சோதனை நடைபெற்றுள்ளது. இதனை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருக்கிறேன் என்றார் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.