குளத்தில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த டேனியல் மகன் ராஜசேகர் (27), அதே ஊரைச் சேர்ந்த மல்லிகா மகன் பார்த்தீபன் (23) ஆகியோர் புதுக்கோட்டை அருகே திருவரங்குளத்தில் உள்ள உறவினர் ராஜசேகர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பகல் அவர்கள் ஊர் திரும்பும் வழியில் அன்னவாசல் அருகேயுள்ள குவாரிகுளத்தில் மோட்டார் சைக்கிளை கழுவியபோது அதில் மூழ்கினர்.
தகவலின்பேரில் வந்த அன்னவாசல் போலீஸார் மூழ்கியவர்களின் உடமைகளைக் கைப்பற்றி, இலுப்பூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்புத் துறையினர், இருவரின் சடலங்களையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








