திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ரூ.80 லட்சம் ரொக்கம், 166 கிராம் தங்கம், 3,275 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. எனவே, தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்துவிட்டு 14 கிலோ மீட்டர் தூரமுள்ள கிரிவலப் பாதையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
எனவே, ஒவ்வொரு மாதமும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெற்றது.
'கோயில் இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தலைமையில் உதவி ஆணையர் வேதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளில் உள்ள உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்
பட்டன.
இதில், ரூ. 80 லட்சத்து 775 ரொக்கம், 166 கிராம் தங்கம், 3,275 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தது தெரியவந்தது.
உண்டியல் காணிக்கை ரொக்கம் ரூ.80 லட்சத்துடன் கோயில்
இணை ஆணையர் அ.தி.பரஞ்சோதி தலைமையிலான அதிகாரிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழலற்ற, சட்டம்-ஒழுங்கில் சீர்குலைவு இல்லாத ஸ்டாலின் ஆட்சி தொடரட்டும்: செல்வப்பெருந்தகை

எல்ஐகே - பிரதீப்பின் முதல் தோல்வி?

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!
வீடியோக்கள்

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


