ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

காவிரியில் தண்ணீர் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்: கே.எச்.முனியப்பா

காவிரியில் தண்ணீர் இருந்தால் அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்தார்.

News image
Updated On :21 மே 2013, 9:45 pm

காவிரியில் தண்ணீர் இருந்தால் அனைத்து மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி பேரவை சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா பங்கேற்று ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியது:

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி இந்தியாவை உலக அரங்கில் உயர்த்திக் காட்டியவர்.

சாதாரண குடிமக்களும் செல்போன் பேசுகிற வசதியையும், வாய்ப்பையும் உருவாக்கித் தொலை தொடர்புத் துறையில் மிகப் பெரிய புரட்சியை அவர் ஏற்படுத்தினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் மாற்றிக் காட்டிய பெருமை அவரையே சாரும்.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டூல் சென்டர் எனப்படும் பயிற்சி மையம் உருவாக்கப்படும். அதில் மாவட்டத்துக்கு 100 பேருக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன்கூடிய பயிற்சி அளிக்கப்படும்.

கிருஷ்ணகிரி -ஒசூர் - ஜோலார்பேட்டை ரயில் போக்குவரத்துத் திட்டம் தற்போது திட்டக் குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்த மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்தத் திட்டம் வரும் 6 மாத காலத்திற்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

காவிரியைப் பொறுத்தவரை கர்நாடகம், தமிழகம், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும்.

காவிரியில் தண்ணீர் இருந்தால் அனைவரும் பகிர்ந்து கொள்ளலாம். தண்ணீர் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள முடியாது.

இந்தப் பிரச்னையைத் திசை திருப்பவோ, ஆவேசப்படவோ, அரசியல் ஆக்கவோ கூடாது. காவிரி நதி விவகாரத்தில் பிரதமர், நடுவர் மன்றத்தின் முடிவே இறுதியானது. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.