விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு: ஜூன் 19-ல் தொடக்கம்

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

News image
Updated On :22 மே 2013, 12:15 pm IST

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 19 முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வியாழக்கிழமைமுதல் (மே 23)  திங்கள்கிழமைவரை (மே 27) விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7.04 லட்சம் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். 95 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் பள்ளி மாணவராகவோ, தனித்தேர்வர்களாகவோ எழுதி தேர்ச்சிப் பெறாதவர்களும், வருகை தராதவர்களும் இந்த சிறப்புத் துணைத் தேர்வை எழுதலாம். அனைத்துப் பாடங்களிலும் தோல்வியுற்றவர்கள்கூட இநதத் தேர்வை எழுதலாம்.

சிறப்பு துணைத் தேர்வில் பங்கேற்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வியாழன் முதல் திங்கள் வரை அனைத்து நாள்களிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான எஸ்.பி.ஐ. சலானையும் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

தேர்வுக் கட்டணம்: தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-ம், இதர கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலம் மட்டுமே தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் கட்டணம் செலுத்த வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தில் உள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை மாணவர்கள் கவனமாகக் குறித்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணைப் பயன்படுத்தியே தங்களது சந்தேகங்களைத் தீர்க்கவோ, தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ, ஹால் டிக்கெட்டைப் பெறவோ முடியும். அதேபோல், பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை நகலெடுத்தும் விண்ணப்பதாரர்கள் வைத்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்? பள்ளி மாணவர்கள் உடனடித் தேர்வுக்கான c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் செலுத்திய எஸ்.பி.ஐ. சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் மே 27-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை தனித்தேர்வர்களாக எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்கள் c‌o‌n‌f‌i‌r‌m​a‌t‌i‌o‌n​ c‌o‌p‌y​ விண்ணப்பம் மற்றும் எஸ்.பி.ஐ. சலானை அவர்களின் மாவட்டத்துக்குரிய அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு அட்டவணை

ஜூன் 19 - புதன்கிழமை - மொழிப்பாடம் முதல் தாள்

ஜூன் 20 - வியாழக்கிழமை - மொழிப்பாடம் இரண்டாம் தாள்

ஜூன் 21 - வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 22 - சனிக்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூன் 24 - திங்கள்கிழமை - இயற்பியல், பொருளாதாரம்

ஜூன் 25 - செவ்வாய்க்கிழமை - கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷின் அண்ட் டயட்டிக்ஸ்

ஜூன் 26 - புதன்கிழமை - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்

ஜூன் 27 - வியாழக்கிழமை - வேதியியல், கணக்குப் பதிவியல்

ஜூன் 28 - வெள்ளிக்கிழமை - உயிரியல், வரலாறு,

தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்

ஜூன் 29 - சனிக்கிழமை - கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்,

இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ்,

பயோ-கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம் (தமிழ்), தட்டச்சு

ஜூலை 1 - திங்கள்கிழமை - தொழில்பிரிவு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு, பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (பொது), புள்ளியியல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.