ஜூன் 23 வரை 3 நாள்கள் சட்டப்பேரவைக் கூட்டம்! அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு74 ஆண்டு கால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலமாக புதிய சாதனை! ஆளுநர் உரைதமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடரும்! பேரவையில் ஆளுநர் உரைபாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

விக்ரம் அகர்வாலை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2013, 1:44 am IST

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கூறியதாவது: சென்னையைச் சேர்ந்த நட்சத்திர ஹோட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து மே 30-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சார்பில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதே புகாரில் மும்பை போலீஸார் அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து, விக்ரம் அகர்வால் மும்பை குற்றப்பிரிவு போலீஸார் முன் ஆஜரானார். அவரிடம் மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மூன்று முறை சம்மன் அனுப்பிய நிலையில், விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள தமிழக சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட விக்ரம் அகர்வாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போலீஸார், அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். ஆனால், அவரை மூன்று நாள்கள் மட்டுமே காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித்தார். வரும் ஜூன் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்த வேண்டும்.

குருநாத் மெய்யப்பன், விண்டு தாரா சிங் ஆகியோருடன் உள்ள தொடர்பு குறித்தும் அவர் செல்போனில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் விசாரிக்கப்படும். அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு சுமார் 50-க்கு முறைக்குமேல் பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.