ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாமக புறக்கணிப்பு: வாக்கு மதிப்பில் பெரிய அளவில் மாற்றமிருக்காது

பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.

Updated On :22 ஜூன் 2013, 12:45 am

பாமக புறக்கணிப்பால் வாக்கு மதிப்பால் பெரிய அளவில் மாற்றமிருக்காது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகின்றன.

இந்தத் தேர்தலில் 234 எம்.எல்.ஏ.க்களும் வாக்காளர்கள் ஆவர். காலியாகும் 6 இடங்களுடன் ஒன்றைக் கூட்டினால் ஏழு என்ற மதிப்பு வரும். 234ஐ 7 ஆல் வகுக்கும் போது 33.428 என்ற மதிப்பு வரும். இதனுடன் ஒன்றைக் கூட்டினால் வரும் முழு மதிப்பு 34 ஆகும்.

தமிழக சட்டப் பேரவையில் பாமகவுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்கும் போது மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 231 ஆகக் குறையும்.

இந்த எண்ணிக்கையை ஏழால் வகுக்கும் போது, 33.01 என்ற மதிப்பு கிடைக்கும். இந்த மதிப்புடன் ஒன்றைக் கூட்டும் போது கிடைக்கும் முழுமையான மதிப்பு 34 ஆகும். எனவே, பாமக புறக்கணிப்பால் மாநிலங்களவைத் தேர்தல் வாக்கு மதிப்பில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏதும் இருக்காது.

மாநிலங்களவைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது எத்தனை வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என்பதைப் பொருத்தே வெற்றிக்கான இலக்கு மதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாமகவின் முடிவு திடீரென மாறி, வாக்கெடுப்பில் பங்கேற்றாலும் வாக்கு மதிப்பு 34 என்ற அளவிலேயே இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.