நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாநிலங்களவைத் தேர்தல்: பாமக புறக்கணிப்பு

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2013, 4:57 am IST

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலை புறக்கணிக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் பா.ம.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு பா.ம.க. ஆதரவு தெரிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த நிலையில், தி.மு.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் முடிவை பா.ம.க. எடுத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ம.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றபட்டது. கூட்டத்துக்கு பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிக்காமல் புறக்கணிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

புறக்கணிப்பு முடிவு ஏன்? கடந்த 2011 ஜூன் 27-ல் நடைபெற்ற பாமகவின் பொதுக்குழுவில் திராவிடக் கட்சிகளுடனோ அல்லது தேசிய கட்சிகளுடனோ கூட்டணி அமைப்பது இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி போட்டியிடும் சில கட்சிகள் பாமகவிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியாக இருக்கும்படி பாமக நிர்வாகக் குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதே உணர்வே செயற்குழு கூட்டத்திலும் வெளிப்பட்டது.

அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் எந்தக் கட்சியையும் ஆதரிப்பதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் செயற்குழு கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.