ஆசிரியர் தகுதித் தேர்வில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அரசு மேல் முறையீடு செய்யக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சான்று சரிபார்ப்பு ஏற்கெனவே முடித்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ஆசிரியர் தேர்வு வாரியம் மேல்முறையீடு செய்யப் போவதாக செய்தி வந்துள்ளது. இது மிகத் தவறான முடிவாகும். ஆசிரியர்கள் எல்லாம் மன நிறைவு தரும் முடிவு என்று இந்தத் தீர்ப்பினைப் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அரசு மேல் முறையீடு செய்தால், அது ஆசிரியர்களுக்கு எதிராக எடுத்த முடிவாகவே இருக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தமிழில் வாதாட முதலில் அனுமதி மறுத்து, தற்போது மீண்டும் வாதாட நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார். இது தமிழுக்குக் கிடைத்த வெற்றி. இதற்காக முதலில் கோரிக்கை வைத்த வழக்குரைஞர் பகத்சிங், தமிழில் வாதாட அனுமதியளித்த நீதிபதி ஆகியோருக்கு நன்றி என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!

ஸ்ரீரங்கம் கோயிலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வழிபாடு

கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!

ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


