சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

Updated On :22 ஜூலை 2013, 3:10 am IST

நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

பா.ம.க. ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 ஆயிரம் பா.ம.க.வினர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசின் பழிவாங்கும் படலத்தால் முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் சிறைச் சென்றனர்.

மூத்த தலைவர் ராமதாஸýம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபோல் பல்வேறு போராட்டங்களைக் கடந்துதான், பா.ம.க. வளர்ச்சி அடைந்துள்ளது.

திமுக, அதிமுகவை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒரு நாடாளுமன்ற எம்.பி. சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டால், குறைந்தபட்சம் 15 தொகுதிகளை கைப்பற்றும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.