மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கிரானைட் கற்கள் சரிந்து இருவர் சாவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :21 ஜூலை 2013, 9:57 pm

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் பகுதி கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் (36). இவர் அதே கிராமத்தில் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வந்தார்.

தற்போது அவரது வீட்டில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. சனிக்கிழமை இரவு லாரியில் இருந்த கிரானைட் கற்களை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சேகருடன் (56) சேர்ந்து கீழே இறக்கும் பணியில் ராமதாஸ் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திடீரென கிரானைட் கற்கள் சரிந்து ராமதாஸ், சேகர் ஆகியோர் மேல் விழுந்தது. இதில் 2 பேரும் கிரானைட் கற்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பந்தநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.