ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காகப் பதுக்கி வைத்திருந்த 72 ஜெலட்டின் குச்சிகள், 30 டெட்டனேட்டர்கள் மற்றும் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் பல்லிகளைப் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாடானை தாலுகா, திருப்பாலைக்குடி கிழக்குத் தெருவில் வசிக்கும் நயினா முகம்மது என்பவரது மகன் அகமதுகான் (49). இவரது வீட்டின் பின்புறம் மீன்பிடிக்கத் தேவையான வெடிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கியூ பிரிவு போலீஸôருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் போலீஸôர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, 48 ஜெலட்டின் குச்சிகள், 20 டெட்டனேட்டர்கள், 5 அடி நீள வயர், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் அட்டை 2 கிலோ, கடல் பல்லி 10 கிலோ ஆகியவை இருப்பதைக் கண்டறிந்து அவற்றைப் போலீஸôர் பறிமுதல் செய்து அகமதுகானையும் கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின்பேரில், திருவாடானை தாலுகா தொண்டி அருகே புதுக்குடி பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீஸôர் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முரணான தகவல்களைக் கூறியதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீஸôர் சோதனை நடத்தினர். இதில் 24 ஜெலட்டின் குச்சிகள், 10 டெட்டனேட்டர்கள், 2 அடி வயர் ஆகியவற்றைப் போலீஸôர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இருவரும் திருவாடானை தாலுகா, புதுக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த கோட்டை ராஜா மகன் செந்தில்குமார் (27), தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சமயமணி (23) எனத் தெரிய வந்தது.
செந்தில்குமார், சமயமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டதாக கியூ பிரிவு போலீஸôர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

