வால்பாறையில் பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் அதிக அளவில் பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழைக்கு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், சோலையாறு அணை கடந்த மாதம் நிரம்பியது. இதனால் தற்போது அணையின் இரு மின்னுற்பத்தி நிலையங்களுக்கும் பரம்பிக்குளத்துக்கும் இடைவிடாது தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த கனமழை காரணமாக தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். தேயிலைத் தோட்டங்களில் சராசரியாக ஒரு தொழிலாளி 50 கிலோவுக்கு மேல் தேயிலை பறிப்பது வழக்கம். தற்போது மழையால் உற்பத்தி குறைந்து விட்டதால், 10 கிலோ வரை மட்டுமே தேயிலை பறிக்க முடிவதாக நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.
தவிர, எஸ்டேட்களின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்தும் போக்குவரத்து தடைப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை, சோலையாறு அணையில் இருந்து ஷேக்கல்முடி செல்லும் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால் ரோடு துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வால்பாறை வழியாகச் செல்லும் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் வாழைத்தோட்டம் பகுதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவாகியுள்ள மழையளவு (மி.மீ.ல்.): வால்பாறை- 54.5, சோலையாறு- 70, அப்பர் நீராறு- 62, லோயர் நீராறு- 48.
சோலையாறு அணைக்கு விநாடிக்கு 5,875.92 கனஅடி நீர் வரத்தாக இருப்பதால், அணையில் இருந்து இரண்டு மின் நிலையங்கள் மற்றும் சேடல் டேம் வழியாக மொத்தம் 5,571.64 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 163.99 அடியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


