/

மேட்டூர் அணை மதகில் தண்ணீர் கசிவு நிறுத்தம்

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு நிறுத்தப்பட்டது.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 9:35 pm

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி மதகில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு நிறுத்தப்பட்டது.

மேட்டூர் அணை நிரம்பியதும் உபரி நீரை வெளியேற்ற அணையின் இடது கரையில் 16 கண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாலத்தின், 15-ஆவது மதகில் புதன்கிழமை தண்ணீர் கசிவு ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியை பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தண்ணீர் வெளியேறுவது கண்டுபிடித்தனர்.

மதகை சற்று உயர்த்தி, மீண்டும் இறக்கியதும் தண்ணீர் கசிவது நின்றது. மதகு பராமரிப்பிற்கு பிறகு கீழே இறக்கிய போது ஒரே நேர்கோட்டில் இறங்காததால் இந்தக் கசிவு ஏற்பட்டதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.