மெட்ராஸ் கபே திரைப்படத்துக்கு எதிரான மனுவுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக டி.ஜி.பி., மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என மேலூரைச் சேர்ந்த வழக்குரைஞர் பி.ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், டி. மதிவாணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது திரைப்படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜகோபாலன், இந்த திரைப்படம் தமிழர்கள் மற்றும் பிற இனத்தைச் சேர்ந்தவர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
படத்தின் தமிழ் மொழியாக்க திரைப்படத்தைத் தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிட்டார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு மீது இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், தமிழக டி.ஜி.பி. மற்றும் திரைப்படத் தணிக்கைக் குழுவினர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு செப்டம்பர் 3 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாநகரின் சில பகுதிகளில் நாளை மின்தடை
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


