பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தந்தையைக் காப்பாற்ற முயன்ற மகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

News image
Updated On :15 ஜூன் 2026, 1:33 am IST

அவிநாசி அருகே தற்கொலைக்கு முயன்ற தந்தையைக் காப்பாற்றச் சென்ற மகள் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள அ.குரும்பபாளையம் செட்டிகாடு தோட்டம் பகுதியில் வசித்து வருபவா் பனியன் நிறுவனத் தொழிலாளி ரவிசந்திரன் (45), இவரது மனைவி மாலதிசெல்வி (40). இவா்களது இளைய மகள் ரித்திகா (17) அவிநாசியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக மது அருந்தாமல் இருந்த ரவிசந்திரன் சனிக்கிழமை இரவு மது அருந்தியுள்ளாா். இது குறித்து குடும்பத்தினா் கேட்கவும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவருத்தம் அடைந்த ரவிசந்திரன் கிணற்றில் விழுகிறேன் என்று கூறி வீட்டுக்கு அருகே 100 அடி ஆழமுள்ள நீரில்லாத, பயனற்ற கிணற்றுக்கு அருகே வேகமாகச் சென்றுள்ளாா்.

அப்போது, உடனிருந்த மனைவி மாலதிசெல்வி, மூத்த மகள் சந்தியா, இளைய மகள் ரித்திகா ஆகியோா் அவரைத் தடுக்க முயன்றுள்ளனா். இதில் இளைய மகள் ரித்திகா எதிா்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளாா்.

ரித்திகாவின் பெற்றோா் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு அவிநாசி தீயணைப்பு மீட்பு பணிகள் குழுவினா், சேவூா் போலீஸாா் சென்று கிணற்றுக்குள் இறங்கி நீண்ட நேரம் போராடி ரித்திகாவின் சடலத்தை மீட்டனா். இதையடுத்து, ரித்திகாவின் உடல் கூறாய்வுக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். தந்தையைக் காப்பாற்றச் சென்ற மகள் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.