இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சிதிலம் அடைந்துவரும் அனந்தபுரீஸ்வரர் கோயில்

பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து வரும் புகழ்பெற்ற பேர்பெரியான்குப்பம் அனந்தபுரீஸ்வரர் கோயிலைப் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 9:02 pm

தினமணி

பராமரிப்பின்றி சிதிலம் அடைந்து வரும் புகழ்பெற்ற பேர்பெரியான்குப்பம் அனந்தபுரீஸ்வரர் கோயிலைப் புனரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்ருட்டி வட்டம், பேர்பெரியான்குப்பம் கிராமத்தில் அனந்தபுரீஸ்வரர் கோயில் உள்ளது. 15-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாகக் கூறப்படும் இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இக்கோயிலில் 10 நாள் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இதில் சுவாமி திருக்கல்யாணம், தெப்போற்சவம் மற்றும் தேர்த் திருவிழா சிறப்பானது.

கோயில் சிதிலம்: புகழ்பெற்ற இக்கோயில் போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலம் அடைந்து வருகிறது. கோயிலின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகியும் சீர்செய்யப்படாததால் பாதுகாப்பு இன்றியுள்ளது.

திருக்குளம்: கோயிலின் எதிர்புறத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் தெப்போற்சவம் இக்குளத்தில் சிறப்பாக நடைபெறும். இக்குளத்தின் படித்துறைகள் சேதம் அடைந்துள்ளது. அருகில் உள்ளவர்கள் கழிவுகளைக் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். மேலும் ஆகாயத் தாமரை படர்ந்து குளத்தை மூடியுள்ளது.

இதனை அகற்றி குளத்தை சுத்தம் செய்யும் பணியில் ஊராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி தேவசேனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

திருத்தேர் பணி மந்தம்: இக்கோயிலில் உள்ள திருத்தேர் சிதிலம் அடைந்ததைத் தொடர்ந்து புதியத் தேர் செய்யும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 13-வது நிதிக்குழு மூலம் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இத்தொகை 2014-2015-ம் ஆண்டில்தான் வரும் எனவும், போதி நிதி மற்றும் இலுப்பை மரம் கிடைக்காததே பணி தாமதத்துக்கான காரணம் என இந்து சமய அறநிலைத் துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

பழமையும், சிறப்பும் கொண்ட இக்கோயிலை புதுப்பித்து வழிபாட்டுக்கு வழிவகை செய்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.