தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பா.ம.க.வினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 3:38 am IST

பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் திருமாறன் (22). பா.ம.க. பிரமுகர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதானதைத் தொடர்ந்து கடந்த வாரம் அரசு பஸ்ûஸ குத்தாம்பூண்டி பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இந்த வழக்கில் திருமாறனைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருமாறனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பார் மனோகரன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருமாறனைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பண்ருட்டி நகரச் செயலர் குண்டர் சட்டத்தில் கைது: பண்ருட்டி, மே 12: பண்ருட்டி நகர பாமக செயலர் நந்தன் என்கிற நந்தகோபால் (40) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாமக நகரச் செயலராக உள்ள இவர் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது தொடர்பாக நடந்த சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களில் பண்ருட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாவட்டக் கண்காணிப்பாளர் ராதிகா பரிந்துரையின்கீழ் இதற்கான உத்தரவை ஆட்சியர் கிர்லோஷ்குமார் பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.