மூதாட்டியிடம் 10 கிராம் தங்கம், கொலுசு திருட்டு: இருவர் மீது வழக்கு
ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராமலட்சுமி (70). இவர் ஊர் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்வாராம். கடந்த வைகாசி மாதம் கே.தொட்டியபட்டியில் நடைபெற்ற


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் 10 கிராம் தங்கம், ஒரு ஜோடி கொலுசை திருடியதாக இருவர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராஜபாளையம், ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராமலட்சுமி (70). இவர் ஊர் ஊராகச் சென்று துணி வியாபாரம் செய்வாராம். கடந்த வைகாசி மாதம் கே.தொட்டியபட்டியில் நடைபெற்ற பொங்கலுக்கு துணி வியாபாரத்திற்காகச் சென்றுள்ளார். அப்போது ராமலட்சுமி வைத்திருந்த சுறுக்குப்பையை கே.தொட்டியபட்டியைச் சேர்ந்த அழகர் மகன் நம்பியார் (எ) பெருமாள் திருடியுள்ளார். அதைப் பார்த்த ராமலட்சுமி, நம்பியார் (எ) பெருமாளை சத்தம் போட்டு புடுங்கியுள்ளார். இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்து ஊருக்குச் செல்ல அங்கிருந்த கே.தொட்டியபட்டியைச் சேர்ந்த திருப்பதி என்ற ஆட்டோ டிரைவரைக் கூப்பிட்டு ராமலட்சுமி பொருட்களை ஆட்டோவில் ஏற்றியுள்ளார். அப்போது நம்பியார் (எ) பெருமாளும் திருப்பதியும் ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அதைப் பார்த்த ராமலட்சுமி, சுறுக்குப்பையை பார்த்தபோது அது காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அதனை இருவரிடமும் கேட்டுள்ளார்கள். எடுக்கவில்லை என்று கூறிவிட்டார்களாம். வீட்டில் போய் நன்றாக தேடிப் பார்த்துள்ளார். சுறுக்குப்பை கிடைக்கவில்லை. அதில் 10 கிராம் தங்க காசுகள், 1 ஜோடி கொலுசு வைத்திருந்துள்ளார்.
இது குறித்து ராமலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கவிதா, வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதன் பேரில் போலீஸார் நம்பியார் (எ) பெருமாள், திருப்பதி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...