அரசு பஸ்களில் டிரைவர் வேலைக்கு வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பஸ் டிரைவர்களுக்கு விதிப்படி, உரிய பலன்கள் வழங்கப்படாத காரணத்தால், இப் பணிக்கு வரவேற்பு வெகுவாகக் குறைந்து வருவதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தேர்வுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அழைத்தாலும் ஒருவரும் வருவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவாக அரசு போக்குவரத்து கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணிக்குத் தேர்வு செய்யப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வேலைக்குச் சேரும் முதல் நாளிலேயே பணியாளர் எண் வழங்கப்பட்டுவிடும்.
அன்று முதல் 240 நாள்கள் அவர் பணி முடித்தவுடன், அவருடைய பணி வரன்முறை செய்யப்பட்டு முழு ஊதியம் அவருக்கு வழங்கப்படும். அதாவது நாள் ஒன்றுக்கு ரூ. 265 வீதம் வழங்கப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஒப்பந்தப்படி 240 நாள்கள் பணி முடித்தவுடன், பணி வரன்முறை செய்யப்படுவதில்லை. சேம ஊழியராக (ரிசர்வ்) அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை பணிபுரிந்த பின்னரே, பணி வரன்முறை செய்யப்படுகின்றனர்.
அதுவரை சேம ஊழியர்களுக்கான ஊதியமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஊதியமும் குறிப்பிட்ட நாளில் கொடுக்கப்படுவதில்லை. மாதத்துக்கு மாதம் ஊதியம் வழங்கும் தேதி மாறுபடுகிறது. மேலும், அவர்களுக்கு தொடர்ச்சியாக பணி கொடுக்கப்படும் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது.
இதுபோன்ற காரணங்களால், பஸ் டிரைவர் பணிக்கு வருவதற்கு பெரும்பாலானோர் தயக்கம் காட்டி வருவதாக அரசு பஸ் டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இப்போது நூற்றுக்கணக்கான டிரைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியை தமிழக அரசு இப்போது முடுக்கிவிட்டுள்ளது. ஆனால், தேர்வுக்கு அழைத்தும் ஒருவரும் வருவதில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக திருச்சி பணிமனையில் டிரைவர் பணிக்கான நேர்முகத் தேர்வு வியாழக்கிழமை (பிப்ரவரி 6) நடத்தப்பட்டுள்ளது. இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 94 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் வெறும் 17 பேர் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளனர். அதிலும் 4 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, 13 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
பிற இடங்களிலும் இதே நிலைதான் இருப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆள் பற்றாக்குறை காரணமாக பஸ்கள் இயக்க முடியாமல் போனதோடு
தற்போது பணியில் இருக்கும் டிரைவர்களை இரவு, பகலாக தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து ஊழியர் சம்மேளன நிர்வாகிகள் கூறியது: போக்குவரத்துக்கழகங்களில் முழுநேர டிரைவர் மற்றும் நடத்துநர்களுக்கு பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து படிகளுடன் சேர்த்து, நாள் ஒன்றுக்கு ரூ. 438 ஊதியம் வழங்க வேண்டும். ஆனால், இப்போது முழு நேர ஊழியருக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 265 மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் புதிதாக பணிக்குச் சேரும் ஊழியர்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகே பணி வரன்முறை செய்யப்படுகின்றனர். இந்த நிலைகளை மாற்றினால்தான், அரசு டிரைவர் பணிக்கு ஆட்கள் வருவர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்புடன் வெளியாகும் நூறு சாமி?

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


