கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து திருமாவளவன் தலைமையில் நாயக்கன்கொட்டாய் கிராமத்துக்கு ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்துக்கு


கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தருமபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் கிராமத்துக்கு வரும் 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஊர்வலம் செல்ல இருப்பதாக அந்தக் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கி.கோவேந்தன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
வரும் 4-ஆம் தேதி தருமபுரி நத்தம் இளவரசன் நினைவு நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள இளவரசனின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் இருந்து தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில், நாயக்கன்கொட்டாய் கிராமத்துக்கு ஊர்வலமாக செல்ல இருப்பதால், கட்சியின் அனைத்து நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...