நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கணவனுடன் நெருங்கி பழகிய பெண்னை அடித்து உதைத்த இரண்டு மனைவிகள்

  பழனி சாமி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர்ல பரமசிவம் மகன் மாசாணத்துரை.  இவர் மினிவேனி ஓட்டி வருகிறார்.  இவருக்கு பெரியப்பா நகரில் தேவி(30) என்ற மனைவியும்,

News image
Updated On :29 ஜூலை 2014, 2:10 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே இருபெண்கள் தங்கள் கணவருக்காக ஒருபெண்ணை தாக்கினர்.

     பழனி சாமி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர்ல பரமசிவம் மகன் மாசாணத்துரை.  இவர் மினிவேனி ஓட்டி வருகிறார்.  இவருக்கு பெரியப்பா நகரில் தேவி(30) என்ற மனைவியும், ராஜாஜி ரோட்டில் ஆனந்தி(25) என்ற மற்றொரு மனைவியும் உள்ளனர்.  மாசாணத்துரை பழனி அருகே மடத்துக்குளத்தில் உள்ள தனியார் கோழிப்பண்ணைக்கு மினிவேனில் கோழிகளை இறக்கி விடும் வேலை செய்து வருகிறார். 

அப்போது புது ஆயக்குடியை 8வது வார்டை சேர்ந்த காளிமுத்து மனைவி துரையம்மாள்(30) என்பவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.  துரையம்மாள் மூன்று குழந்தைகளுக்கு தாய் ஆவார்.  துரையம்மாள், மாசாணத்துரை பழக்கம் ஆனந்தி, தேவி ஆகியோருக்கு தெரியவரவே மாசாணத்துரையை கண்டித்துள்ளனர்.  எனினும் பழக்கம் தொடர்ந்துள்ளது. 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த துரையம்மாளை ஆனந்தியும், தேவியும் நேரில் சந்தித்து திட்டியதோடு கல்லால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.  இதில் காயமடைந்த துரையம்மாள் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மாசாணத்துரையின் இரு மனைவிகள் மீதும் பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.